தேனி
தேனி மாவட்டம் கூடலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவில் கரும்பு பயிரிடப்படுகிறது. குறிப்பாக வெட்டுக்காடு, கப்பாமடை, சுருளி அருவிச்சாலை உள்ளிட்ட பகுதிகளில் கரும்பு அறுவடை செய்ய மகாராட்டிர மாநில த்திலிருந்து, 103 பேர் இரண்டு குழுக்களாக வந்து வேலை செய்து வந்தனர்.
இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக இவர்கள் வேலையும் உணவும் இன்றித் தவித்தனர். இவர்களை அழைத்து வந்த ஆலை நிர்வாகம் உதவவில்லை.தகவல் கிடைத்ததும், கண்காணிப்பு அலுவலர் ஜெ.பாலசண்முகம், நகராட்சி ஆணையாளர் ஆறுமுகம், இவர்களை, கூடலூரில் உள்ள தனியார்பள்ளியில் தங்கவைத்து, உணவு அடிப்படைத் தேவைப்பொருட்களுக்கு ஏற்பாடு செய்து கொடுத்தனர்.