ராமநாதபுரம் :
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரானா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏர்வாடி தர்கா தனிமைப்படுத்தப்பட்டோர் முகாம், கீழக்கரை அருகே முத்துச்சாமிபுரம், ராமநாதபுரம் காய்கறி சந்தை ஆகிய பகுதிகளில் திமுக., சார்பில் கொரானா தடுப்பு நிவாரணம், முகக்கவசங்கள் வழங்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் ஆலோசனைப்படி, மாவட்ட இளைஞரணி இன்பா ரகு தலைமையில், கீழக்கரை இளைஞர் அணி பி.எம்.கஜேந்திரன் , ராமநாதபுரம் ஒன்றிய துணைச் செயலர் புகழேந்தி, ராமநாதபுரம் மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் எஸ். ஆர்.ராஜ்குமார் ஆகியோர் கீழக்கரை முத்துச்சாமிபுரம் காலனி மக்களுக்கு இலவச அரிசி மற்றும் காய்கறி வழங்கினர்.
ராமநாதபுரம் நகர் காய் கனி மார்க்கெட் சந்தையில் பொருட்கள் வாங்க வந்த மக்கள் மற்றும் வியாபாரிகள், அதிகாரிகள், போலீசாருக்கு முகக்கவசங்கள் வழங்கினர்.
ஏர்வாடி தர்காவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வெளி மாநிலத்தவர்கள், மனநலம் பாதித்தோருக்கு உணவு வழங்கும் விதமாக அரிசி மற்றும் காய்கறிகளை வழங்கினர்.