இராமநாதபுரம் போலீசாருக்கு முக கவசம் விநியோகம்

பதிவு செய்த நாள் : 02 ஏப்ரல் 2020 19:28

ராமநாதபுரம் :

ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறுவோரை கண்காணிக்கும், வாகனங்களை பறிமுதல் செய்யும் பணியில் உள்ள  காவல் துறையினருக்கு ராமநாதபுரம்

போலீஸ் நண்பர்கள்,  ராமநாதபுரம் ஜூனியர் ரெட் கிராஸ்,  நகர் அரிமா சங்கம்,

ஏ.வி.எம்.எஸ்., மெட்ரிக் பள்ளி கல்வி குழு சார்பில்  முக கவசங்கள் வழங்கப்பட்டன.

கேணிக்கரை காவல் நிலையம்,  செக்போஸ்ட் முதலிய இடங்களில் பணியில் இருந்த போலீசாருக்கு நெரில் முகக் கவசங்கள் தரப்பட்டன.

 இதற்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் ஏ.வி. எம்.எஸ் பள்ளி தாளாளர்  ஜெயக்குமார்,  ராமநாதபுரம் கல்வி மாவட்ட  ஜூனியர் ரெட் கிராஸ் கன்வீனர் ரமேஷ் ஆகியோர்  செய்தனர்.