ஏழை எளியோருக்கு உணவு

பதிவு செய்த நாள் : 02 ஏப்ரல் 2020 19:20

சுசீந்திரம், 

சுசீந்திரம் பகுதி சேவாபாரதி சார்பில் ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவு மற்றும் வீட்டிலிருக்கும் மக்களுக்கான சேவைகளை வழங்கி வருகின்றனர்.

உலகமெங்கும் கொரானா பீதி உள்ளதால் மக்கள் மத்தியில்  அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அனைவரும் வீட்டில் அடைந்து உள்ளனர். மேலும் வெளிநாடுகளில் இருந்துவீட்டிற்கு வந்த நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். ஏழை எளிய மக்கள் மற்றும் ஆதரவற்றோர் உணவிற்காக ஏங்கி வரும் சூழலில் சுசீந்திரம் பகுதியை சேர்ந்த சேவாபாரதி தொண்டர்கள் ஒரு குழுவாக இணைந்து பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி வருகின்றனர்.

தினமும் 150க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்கள் மற்றும் சுகாதாரத் தொழிலாளர்களுக்கு  மதிய உணவுகளை வழங்கி வருகின்றனர். தனிமைப்படுத்தப்பட்டு உள்ள 17 குடும்பங்களுக்கு தேவையான மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகளை வழங்கி வருகின்றனர். காவல்துறை மற்றும் சுகாதாரத் துறையுடன் இணைந்து வாகனத்தில்2 4 மணி நேரமும் சுற்றி வந்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு பிரசாரம் செய்கின்றனர். இந்த சேவை காரணமாக பொதுமக்களுக்கு தைரியத்தை அளித்து வருகின்றனர்.