விஷம் குடித்து பெண் தற்கொலை

பதிவு செய்த நாள் : 02 ஏப்ரல் 2020 19:15

முளகுமூடு அருகே பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

முளகுமூடு காடுவெட்டி விளையை சேர்ந்தவர் பாஸ்கரன். அவரது மனைவி மரிய செல்வம். இவர்களுடைய மகள் நிஷா (27), கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மணிகண்டன் என்பவர் நிஷாவை முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இவர் மின்சாரத்துறையில் காண்ட்ராக்டராக பணி செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 30ம் தேதி மனைவியை அழைத்து கொண்டு மணிகண்டன் தந்தை வீட்டில் விட்டு விட்டு சென்றுவிட்டார். இதனால் மனவேதனையடைந்த நிஷா விஷமருந்தை குடித்து விட்டு மயங்கியபடி கிடந்தார். இதை பார்த்த அவரது உறவினர்கள் அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து அவரது தந்தை தக்கலை போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்த புகார் மனுவின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் அருள் பிரகாஷ் விசாரணை நடத்த சப்இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்கு பதிவு செய்தார்.