முட்டைக்காடு பகுதியில் சிறு வியாபாரி பைக்கில் காய்கறி விற்பனை.

பதிவு செய்த நாள் : 02 ஏப்ரல் 2020 19:08

தக்கலை, 

கிராம பகுதிகளில் வீட்டில் முடங்கி கிடக்கும் மக்களுக்கு காய்கறிகள் பழங்கள் வாகனங்களில் கொண்டு சென்று சிறு வியாபாரிகள் விற்பனை செய்கின்றனர்.

கொரோனா வைரஸ் கடந்த சில வாரங்களாக மக்களை அல்லல்படுத்தி வரும் நிலையில் மக்கள் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர். நகர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ஓரளவு வீட்டுக்கு தேவையான பொருட்கள் கிடைத்த நிலையில் கிராம பகுதிககளில் வசிக்கும் மக்களுக்கு காய்கறிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கிடைக்கவில்லை. அருணங்கால், பருத்திவிளை, காவுவிளை, காடுவெட்டி, கூனிமாவிளை, பண்டாரங்கோணம், வயக்கரை, சரல்விளை, முட்டைக்காடு, கல்குறிச்சி, வட்டம், வில்லுகுறி, சுருளேகோடு, ஆலம்பிலாவடி, பெருஞ்சிலம்பு, வேளிமலை உட்பட நூற்றுக்கணக்கான ஊர்களில் வசிக்கும் மக்களுக்கு தேவையான மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் சற்று குறைவாகவே கிடைத்து வந்தது. இந்நிலையில் வீடுகளில் அடங்கி வாழ்ந்து வரும் மக்களுக்காக சிறு வியாபாரிகள் கேரட், கத்தரிக்காய், மிளகு உள்ளிட்ட பல வகையான காய்கறிகளை வாசல் தட்டி விலைக்கு கொடுத்து வருகின்றனர். இதனால் வீட்டில் பயந்து வாழ்ந்து வரும் மக்கள் ஓரளவு நிம்மதி பெருமூச்சு விட்டு வருகின்றனர்.