மாடுகளுக்கு பசி வைக்கோல் கட்டுகள் பயணம்

பதிவு செய்த நாள் : 31 மார்ச் 2020 09:54

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் சிறுவைகுண்டம் ஏரல் ஆழ்வார்திருநகரி திருச்செந்தூர் கோவில்பட்டி ஆகிய ஊர்களில் நெற்பயிர்கள் நன்கு விளைந்து அறுவடைக்கு தயாராக இருக்கின்றன. தற்போது 144 தடை உத்தரவு போடப்பட்டு இருந்த காரணத்தினால் வயல்களில் அறுவடை ஏதும் நடைபெறவில்லை.அறுவடை செய்யும் மிஷின்கள் ஆங்காங்கே அப்படியே நிறுத்தப்பட்டன. வயல்களில் அறுவடை முடிந்து உள்ள வைக்கோல் கட்டுகள் கேட்பாரற்று கிடந்தது.

நாட்கள் செல்லச் செல்ல வாகனங்கள் ஓடாததால் அச்சொல் கட்டைகள் நகர் புறத்திற்கு கொண்டு செல்ல முடியவில்லை. எதனால் மாடுகளுக்கு தேவையான வைக்கோல் கிடைக்காமல் மாடு வளர்ப்பவர்கள் மிகவும் அவதிப்பட்டனர். தற்போது உயர் அதிகாரிகளின் உத்தரவின்படி மாடுகளின் பசியைப் போக்கிட வைக்கோல் கட்டுகள் வயல் வெளியிலிருந்து நகர்ப்புறங்களில் கொண்டுசெல்லப்படுகிறது. கடந்த மாதத்தை விட இந்த மாதம் வேன் வாடகை கூடியதால் வைக்கோல் கட்டிகளின் விலையும் சற்று கூறியிருப்பதாக விவசாயிகள் கருத்து தெரிவித்தனர்.