ராமநாதபுரம் மீனவர் 300 பேர் மங்களூருவில் தவிப்பு

பதிவு செய்த நாள் : 26 மார்ச் 2020 19:13

ராமநாதபுரம்:

மீன்பிடி தொழிலுக்காக மங்களூரு சென்ற ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர் 300க்கும் மேற்பட்டவர்கள் தங்கள் சொந்த ஊர் திரும்ப  முடியாமல் அங்கு தவித்து வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியத்தில்  25க்கும மேற்பட்ட  கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள்   கர்நாடகா மாநிலம், மங்களூருவில் கடந்த  பல ஆண்டுகளாக மீன்பிடி தொழில் செய்து  வருகின்றனர். நடப்பாண்டு அங்கு தொழிலுக்கு சென்ற மீனவர்கள் தற்போது கொரானா வைரஸ் தொற்று  காரணமாக நாடு தழுவிய ஊரடங்கு  மார்ச் 25 ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது. ஊரடங்கு உத்தரவினால் மங்களூருக்கு சென்ற மீனவர் 300க்கும் மேற்பட்டோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப இயலாமல் அங்கு கடந்த சில நாட்களாக தவித்து வருகின்றனர். இவர்கள் அங்குள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  தங்கள் பெயர்களை பதிவு செய்து அரசின் உத்தரவிற்கு  காத்திருக்கின்றனர். மங்களூரு பகுதியைச் சேர்ந்தோர், ராமநாதபுரம் மீனவர்களை சொந்த ஊர் செல்லுமாறு  விரட்டுகின்றனர்.  உணவு, தங்குமிடம் இன்றி

செய்வதறியாது   மீனவர்கள்

திகைத்து நிற்கின்றனர்.  மங்களூருவில் பரிதவிக்கும் ராமநாதபுரம் மீனவர்கள்  சொந்த ஊர் திரும்ப நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி தீவிர முயற்சி எடுத்து வருகிறார். இருப்பினும்,ராமநாதபுரம்  மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்களின் உறவினர்கள் வலியுறுத்தி உள்ளனர்.