பைக்– கார் மோதல்: ஒருவர் படுகாயம்

பதிவு செய்த நாள் : 26 மார்ச் 2020 17:28

நாகர்கோவில், 

நாகர்கோவில் அருகே பைக் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் படுகாயமடைந்தார்.

நாகர்கோவில் கோட்டார் இளங்கடையைச் சேர்ந்தவர் அண்ணாதுரை (50). சம்பவத்தன்று இவர் பைக்கில் நாகர்கோவிலில் இருந்து பொன்னப்பநாடார் காலனிக்கு சென்றுள்ளார். பொன்னப்பநாடார் காலனி திருவேங்கடம் சாலை அருகே செல்லும்போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த கார் இவரது பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அவர் நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது சம்பந்தமாக நாகர்கோவில் போக்குவரத்து போலீசார் கார் டிரைவர் பொன்னப்ப நாடார் காலனி சர்ச் ரோட்டைச் சேர்ந்த பேட்டரி சுந்தரம் மீது  வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.