ஊரடங்கு உத்தரவை மீறி காரில் சுற்றிய 3 பேர் கைது

பதிவு செய்த நாள் : 26 மார்ச் 2020 17:26

நாகர்கோவில், 

நாகர்கோவிலில் ஊரடங்கு உத்தரவை மீறி காரில் சுற்றிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

கோட்டார் பயிற்சி சப் இன்ஸ்பெக்டர் சுந்திரமூர்த்தி சம்பவத்தன்று ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். கோட்டார் சவேரியார் கோவில் ஜங்ஷன் அருகே செல்லும் போது ஊரடங்கு உத்தரவை மீறி காரில் சுற்றித்திரிந்த கோட்டார் டி.வி.டி. காலனியை சேர்ந்த நமச்சிவாயம் (44), கோட்டார் வீரபத்திரன் தெருவை சேர்ந்த சுரேஷ் (38), பூதத்தான்குளம் கலைவாணர் நகரைச் சேர்ந்த சந்திரன் மகன் நடேசன் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.