ஊரடங்கு உத்தரவை மீறிய ஜமாத் தலைவர் உட்பட 10 பேர் மீது வழக்கு

பதிவு செய்த நாள் : 26 மார்ச் 2020 17:25

நாகர்கோவில் , 

பூதப்பாண்டி அருகே ஊரடங்கு உத்தரவை மீறிய ஜமாத் தலைவர் உள்பட 10 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்தும் பொருட்டு நாடு முழுவதும் கடந்த 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று பூதப்பாண்டி அருகே திட்டுவிளை தர்க்காவில் உத்தரவை மீறி கூட்டத்தை கூட்டி மதிய உணவு வழங்கப்பட்டு உள்ளது. இது பற்றி தகவல் அறிந்த பூதப்பாண்டி போலீசார் சம்பவ இடம் சென்று ஜமாத் தலைவர், துணை தலைவர், செயலாளர், பொருளாளர், கமிட்டி உறுப்பினர்கள் உட்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.