வாலிபர் தற்கொலை

பதிவு செய்த நாள் : 26 மார்ச் 2020 17:21

நாகர்கோவில், 

ஈத்தாமொழி அருகே வாலிபர் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார். ஈத்தாமொழி அருகே புத்தன்துறை இலந்தையடிதட்டு பகுதியை சேர்ந்தவர் ஆதிலிங்கம் மகன் நாகராஜன் (31). மனநிலம் பாதிக்கப்பட்ட அவர் சம்பவத்தன்று விஷமருந்தி மயக்க நிலையில் கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நாகராஜன் உயிரிழந்தார். இது சம்பந்தமாக ஈத்தாமொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.