கொரோனா கலக்கத்தில் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

பதிவு செய்த நாள் : 26 மார்ச் 2020 17:17

வேர்க்கிளம்பி, 

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கையால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். கொரோனா தொற்றை தடுப்பதற்காக மத்திய– மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. தமிழ்நாட்டில் 144 மற்றும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. 

மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் வெளியே வர அனுமதிக்கப்படுகின்றனர். ஆஸ்பத்திரிகள், மருந்து கடைகள், பால் பூத்துகள், பழ கடைகள், காய்கறி, மளிகை கடைகள், பெட்ரோல் பங்குகள், சந்தைகள் உள்பட அத்தியாவசிய சேவைகள் தொடர்கின்றன. போலீசார் தீவிர சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். சாலைகள் பெரும்பாலும் வெறிச்சோடியே கிடக்கின்றன. ஆம்புலன்ஸ், இருசக்கர வாகனங்கள் தவிர பெரும்பாலும் இயங்கவில்லை. சுகாதார பணியாளர்கள் கிருமி நாசினி தெளித்து நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.