ரொம்ப பசிக்குது சாப்பாடு இருக்குமா அழகன்குளம் குழந்தைகள் ஏக்கம்

பதிவு செய்த நாள் : 26 மார்ச் 2020 14:49

நாகர்கோவில்

144 தடை உத்தரவு அமலுக்கு வந்ததால் பேருந்துகள் ஓடவில்லை. கடைகள் ஏதும் திறக்கவில்லை. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கணியான் குளம் என்ற ஊரில் குடியிருக்கும் சுமார் நூ25 க்கும்  மேற்பட்டோர் உண்ண உணவின்றி பட்டினியாக இருப்பதாக தகவல் கிடைத்தது.

 இதை அறிந்த நாகர்கோவில் சமூக ஆர்வலர்கள் அந்த கிராமத்தை நோக்கி உணவு பொட்டலங்கள் எடுத்துக்கொண்டு டூவீலரில் சென்றனர். அந்த ஏரியாவில் கொரோனா ரவுண்ட்ஸ் சென்றபோது தன்னார்வலர்கள் எங்களிடம் வழிகேட்க அவர்களுடன் பயணித்தோம். ஒருவழியாக அந்த கிராமத்தை கண்டுபிடித்து உணவு பாக்கெட் வழங்கப்பட்டது.