அனுமதியின்றி மது வைத்திருந்த வாலிபர் கைது

பதிவு செய்த நாள் : 25 மார்ச் 2020 16:47

தக்கலை,

பத்மனாபபுரம் அருகே அனுமதியின்றி மது வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். கொரோனா வைரஸ் எதிரொலியாக தக்கலை சுற்றுவட்டார பகுதிகளில் இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் வழிகாட்டுதலில் சப்இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீஸ் படையினர் மேட்டுக்கடை, மணலி, இலுப்பக்கோணம், சாரோடு பகுதிகளில் வாகன சோதனை மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

வாகன சோதனைக்கு பின் பத்மனாபபுரம் வழியாக வந்தபோது அப்பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்ற வாலிபர் போலீசாரை கண்டதும் அங்கிருந்து சென்றார். உடனே சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வாலிபரின் கையில் இருந்த பையை பார்த்த போது சட்டவிரோதமாக விற்பனை செய்ய வைத்து இருந்து 15 மது பாட்டில்களை பறிமுதல் செய்தார். விசாரணையில் அவர் பத்மனாபபுரம் பகுதியை சேர்ந்த சஜிவ் என்பது தெரிந்தது. உடனே போலீசார் அவரை கைது செய்தனர். சஜிவ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.