முன்விரோதத்தில் வாலிபர் மீது தாக்குதல்

பதிவு செய்த நாள் : 25 மார்ச் 2020 16:43

தக்கலை, 

பள்ளியாடி அருகே முன்விரோதம் காரணமாக ஆட்டோ, பைக் மற்றும் வீட்டின் ஜன்னல் கண்ணாடியை உடைத்ததுடன் வாலிபர் மீது தாக்குதல் நடந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பள்ளியாடி அருகே உள்ள மூன்றுமாவடிவிளையை சேர்ந்தவர் விஜயகுமார். இவருக்கும் இவரது சகோதரர் ஜெயகுமார் என்பவருக்கும் இடையே வழிப்பாதை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் ஜெயகுமார் சம்பவத்தன்று விஜயகுமாரின் ஆட்டோ, பைக் மற்றும் வீட்டு ஜன்னல் கண்ணாடியை அடித்து உடைத்ததாக தெரிகிறது. இதை தட்டிக்கேட்ட விஜயகுமாருக்கு அடி உதை விழுந்தது. சம்பவம் குறித்து விஜயகுமார் தக்கலை போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்த புகார் மனுவின் அடிப்படையில் எஸ்.எஸ்.ஐ சேவியர் வழக்குப்பதிவு செய்து காயமடைந்த விஜயகுமாரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.