கொரோனா பாதிப்பிற்காக நிதி வழங்க தனி வங்கிக்கணக்கு: நீதிபதிகள் கருத்து.

பதிவு செய்த நாள் : 24 மார்ச் 2020 19:43

மதுரை

  கொரோனா பாதிப்பிற்காக நிதி வழங்க தனி வங்கிக்கணக்கை தமிழக அரசு உருவாக்கி நிதிதிரட்டலாம் என மதுரை உயர்நீதிமன்ற  நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

அவ்வாறு நிதி திரட்ட தனி வங்கிக்கணக்கை தமிழக அரசு உருவாக்கினால் நீதிபதிகள் மற்றும் நீதிமன்றப் பணியாளர்கள் தங்களின் ஒருநாள் ஊதியத்தை கொரோனா நிவாரணப்பணிகளுக்கு  வழங்க முடிவு செய்யலாம் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், எஸ்.எஸ்.சுந்தர் கருத்து கூறினார்கள்.

, நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வில்," கொரோனா நோய் பரவல் தடை மற்றும் எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைளுக்கு உதவ பலரும் நிதியுதவியை வழங்க தயாராக உள்ளனர்.

ஆனால், பல மாவட்ட ஆட்சியர்கள் வாங்க தயாராக இல்லை. ஆகவே, அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என முறையிட்டார்.

 அதற்கு நீதிபதிகள், முதல்வர் நிவாரண நிதி என்பன போன்ற நிவாரண நிதிகளுக்காக தனிக்கணக்கு இருக்கும் நிலையில், கொரோனா பாதிப்பிற்காக நிதி வழங்க தனி வங்கிக்கணக்கை உருவாக்கலாம் என தெரிவித்த நீதிபதிகள், அவ்வாறு உருவாக்கினால் நீதிபதிகள் மற்றும் நீதிமன்றப் பணியாளர்கள் தங்களின் ஒருநாள் ஊதியத்தை வழங்க முடிவு செய்யலாம் என தெரிவித்தனர்.