கோவிட்-19 வைரஸ் நோயாளிகளுக்கு சென்னையில் தனி அரசு மருத்துவமனை

பதிவு செய்த நாள் : 24 மார்ச் 2020 19:14

சென்னை

சென்னை அண்ணா உள்ள ஓமந்தூரர் அரசு மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கோவிட்-19 வைரஸ் பாதிப்பு பாதிப்புக்கு இலக்கான நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான சிறப்பு மருத்துவமனையாக மாற்றப் படுகிறது என தமிழ்நாடு சுகாதார அமைச்சர் சி. விஜயபாஸ்கர் இன்று கூறினார்.

இம் மருத்துவமனையில் 350 படுக்கைகள் அமைக்கப்படும். அந்த மருத்துவமனையில் ஏற்கனவே அளிக்கப்பட்டுவரும் பல்வேறு சிகிச்சைகள் நிறுத்தப்பட்டு புதிதாக கோவிட்-19  வைரஸ் பாதிப்புக்கான நோயாளிகளுக்கு மட்டுமே அங்கு சிகிச்சை அளிக்கப்படும் என அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்தார்

ஓமந்தூரார் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை புதிதாக அமைக்கப்பட்டது. ஏராளமான இடம் உள்ளது. அந்த மருத்துவமனையை கோவிட்-19 வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

மற்ற மருத்துவமனைகளை` கோவிட்-19 வைரஸ் நோயாளிகளுக்கு ஒதுக்கினால் ஏற்கனவே அங்குள்ள நோயாளிக்ளை வேறு மருத்துவ மனைக்கு மற்றியாக வேண்டும். ஆனால் ஓமந்தூரார் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையைப் பொருத்தமட்டில் அந்தப் பிரச்சினை இல்லை.

ஏற்கனவே சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு தொந்தரவு தரப்படுவதை யாரும் விரும்பவில்லை. அதனால் தான் ஓமந்தூரார் மருத்துவமனை தேர்வு செய்யப்பட்டுள்ளது என விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

புதிய மருத்துவமனைக்கு தேவையான படுக்கைகள் மற்றும் நுரையீரல் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு வென்டிலேட்டர் ஆகியவை விரைவில் கொள்முதல் செய்யப்படும் எனவும் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

கோவிட்-19 வைரஸ் நோய்க்கான ரத்த சோதனைகளுக்கு கட்டணம் மிக அதிகமாக உள்ளது.

கோவிட்-19 வைரஸ் தொற்று இல்லை என்றால் அந்த ரத்தப் பரிசோதனைக்கு ரூ. 1500 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கோவிட்-19 வைரஸ் உறுதி செய்யப்பட்டால் கட்டணம் ரூ 4500 செலுத்தவேண்டும்.

ஏழைகள் இந்த கட்டணத்தை செலுத்துவது மிகக் கடினம். அதனால் கோவிட்-19 வைரஸ் ரத்தப் பரிசோதனைகளுக்கான கட்டணத்தை  ஒருங்கிணைந்த சுகாதார காப்பீட்டு திட்டத்தின் கீழ் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தற்போது அரசு மருத்துவமனைகளில் கோவிட்-19 வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 10,000 படுக்கைகளை கொடுக்க இயலும். தனியார் துறையில் இந்த கோவிட்-19 வைரஸ் சிகிச்சைக்கு  இன்னும் 750 முதல் 1500 படுக்கைகளை ஒதுக்கிடலாம்.

இத்தகைய வசதி இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. இந்த வகையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என விஜயபாஸ்கர் கூறினார்.

சீனியர் டாக்டர்கள் குழு

கோவிட்-19 வைரஸ் நோயாளிகளுக்கு அளிக்க வேண்டிய சிகிச்சை நடைமுறைகளை தீர்மானிக்க சீனியர் டாக்டர்கள் அடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. 

இக்குழுவினர் உலக நாடுகளிலெல்லாம் கோவிட்-19 வைரஸ் நோயாளிகளுக்கு அளிக்கும் சிகிச்சை குறித்து கண்டறிந்து தமிழகத்தில் கோவிட்-19 வைரஸ் நோயாளிகளுக்கு எத்தகைய சிகிச்சை அளிக்கலாம் என்பதைத் தெரிவிப்பார்கள். 

தனியார் மருத்துவமனையில் கோவிட்-19 வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை சிகிச்சை அளிப்பது குறித்து அப்பல்லோ மருத்துவமனை , வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி வேலூர் ஆகிய  தனியார் மருத்துவமனைகளின் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

அப்பல்லோ நிர்வாகம் 100 படுக்கைகள் ஒதுக்க தயாராக இருப்பதாக உறுதி அளித்துள்ளது. 

வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரி 250 படுக்கைகளை ஒதுக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.