உலகளவில் கொரோனா வைரஸ் - நெல்லையில் கொலை

பதிவு செய்த நாள் : 23 மார்ச் 2020 13:55

பாளையங்கோட்டை

உலகமே கொரோனா பிடியிலிருந்து தப்பிக்க முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். ஒவ்வொரு தனிமனிதனும் பீதி கலந்த முகத்துடன் மரண பயத்துடன் நெல்லை பாளையங்கோட்டையில் உலாவிவருகின்றனர்.

இது ஒருபுறமிருக்க எதையும் கண்டுகொள்ளாமல் நெல்லைக்கே உரித்தான பாணியில் வெட்டுக்குத்து அரங்கேறியுள்ளது.நெல்லை பாளையங்கோட்டை சமாதானபுரத்தில் மனைவி மற்றும் மகனுடன் பைக்கில் வந்து கொண்டிருந்த இளைஞர் முருகானந்தத்தை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டியதில் சம்பவ இடத்தில் உயிரிழந்தார் இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொரோனா மரண பயம் ஒரு புறம் இருந்தாலும் நெல்லை என்றாலே தமிழகமெங்கும் ஒரு  அச்சம் இருக்கும்.. ஆனால் யாருக்கும் பயப்படாமல் பட்டப்பகலில் நடுரோட்டில் நடந்த இந்த சம்பவம் வாடிக்கையானது தான். இதனை பார்த்தவாறு பொதுஜனங்கள் அன்றாட வாழ்க்கை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்