நெல்லையில் திருமண விழா வாழ்த்துவோர் ஆப்சென்ட்

பதிவு செய்த நாள் : 22 மார்ச் 2020 11:00

பாளையங்கோட்டை

திருநெல்வேலியில் இருவீட்டார் ஏற்பாட்டின் பேரில் முன்னதாக நிச்சயதார்த்தம் நடந்த திருமண விழா இன்று திருநெல்வேலியில் நடந்தது. இருவீட்டாரின் ஒருசிலரே இருக்க வாழ்த்துவோர் பலரை எதிர்பார்க்க ஏமாற்றமே மிஞ்சியது.

பஞ்சாங்கத்தின் படி இன்று முகூர்த்த நாள் இருப்பதால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் திருமணங்கள் நடந்து வருகிறது. திருமண வீடுகளில் கூட்டத்தை கூட்ட வேண்டாம் என தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.கொரோனா தாக்கத்திலிருந்து தப்பிக்க அனைவரும் வீட்டினுள் பாதுகாப்பாக இருக்கின்றனர்.இந்நிலையில் திருநெல்வேலியில் நடந்த திருமண விழா ஒன்றில் மிக குறைவாகவே உறவினர்கள் காணப்பட்டனர். சுமார் 600க்கும் மேற்பட்ட உறவினர்களை எதிர்பார்த்த நிலையில் குறைந்த அளவில் உறவினர்கள் கலந்து கொண்டனர். வாழ்த்துவோர்கள் 500-க்கும் மேற்பட்டோர் ஆப்சென்ட் ஆகினர்.
மார்ச் 22 என்ற நாள் புதுமணத் தம்பதிகளுக்கு ஒரு மறக்க முடியாத நாளாக அமைந்துள்ளது.