மயான‌ அமைதியில் நெல்லை பாளையங்கோட்டை

பதிவு செய்த நாள் : 19 மார்ச் 2020 19:17

திருநெல்வேலி

வரலாறு காணாத வகையில் படு பிஸியாக காணப்படும் தாமிரபரணி ஆற்று பாலம் அமைதி காத்துக்கொண்டிருக்கிறது.

திருநெல்வேலி நகரம் பாளையங்கோட்டை எப்போது படு பிசியாக இயங்கி கொண்டே இருக்கும். பாளையங்கோட்டையில் இருந்து நெல்லை நகரத்திற்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் ஹாரன் சப்தத்தோடு படு பிசியாக ஓடிக் கொண்டிருக்கும்.

கொரோனா வைரஸ்  அச்சத்தின் காரணமாக பள்ளி கல்லூரிகள் வணிக வளாகங்கள் தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. அரசு ஆஸ்பத்திரிகள் முடுக்கிவிடப்படுள்ளது.‌

தூத்துக்குடி கன்னியாகுமரி தென்காசி விருதுநகர் மதுரை ஆகிய பெருநகரங்களில் இருந்து பல ஆயிரக்கணக்கான பிரயாணிகள் ரயில் மற்றும் பேருந்துகளில் வந்து செல்வதால் நெல்லை ஜங்ஷன் என அழைக்கப்படுகிறது.

இன்று போக்குவரத்துகள் குறைந்து படு பிசியாக காணப்படும் நெல்லை மயான அமைதியாய் காணப்படுகிறது.