கரோனா வைரஸ் அச்சுறுத்தல்; சென்னை முழுவதும் உள்ள டீக்கடைளுக்கு புதிய கட்டுப்பாடுகள்

பதிவு செய்த நாள் : 19 மார்ச் 2020 14:20

சென்னை,

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சென்னை முழுவதும் உள்ள டீக்கடைகளுக்கு இன்று புதிய கட்டுப்பாடுகளை தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை விதித்துள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 168 ஆக அதிகரித்துள்ளது. கரோனா வைரஸால் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்தியாவில் கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.

டீக்கடைக்கு புதிய கட்டுப்பாடுகள்

கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க சென்னை முழுவதும் உள்ள டீக்கடைகளில்  தேனீர் வழங்கும் கிளாஸ் அல்லது  டம்ளர்களை சோப் ஆயில் போட்டு கழுவ வேண்டும். 

டீ மாஸ்டருக்கு காய்ச்சல் இருந்தால், உடனே அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். 

பெரிய உணவகங்கள், நட்சத்திர உணவகங்களில் உணவு பாத்திரங்களை உயர்ந்த பட்சம்  தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை அறிவுறுத்தியுள்ளது.