திருமண ஆசைகாட்டி கல்லூரி மாணவியை கெடுத்த இளைஞர் தற்கொலை முயற்சி

பதிவு செய்த நாள் : 18 மார்ச் 2020 17:58

திருச்செந்தூர்

திருச்செந்தூர் அருகே கல்லூரி மாணவியை திருமண ஆசை வார்த்தைகள் கூறி கர்ப்பமாக்கிய வாலிபர் மீது அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்குபதிவு செய்தனர். இதற்கிடையே அந்த வாலிபர் உடலில் மண்ணெண்னை ஊற்றி தற்கொலைக்கு முயன்று திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


திருச்செந்தூர் அருகே உள்ள சீர்காட்சி விஜயநாராயணபுரத்தைச் சேர்ந்தவர் செல்வலட்சுமி(20). திருச்செந்தூரில் உள்ள பி.எட் கல்லூரியில் முதலாண்டு படித்து வருகிறார். இவர் தந்தை மறைந்து நான்கு ஆண்டுகள் ஆகிறது. தாய் பராமரிப்பில் வளர்ந்து வருகிறார். இவரது உறவினரான சீர்காட்சி வடக்கு தெருவைச்சேர்ந்த  பரிபூரணதாஸ் மகன் பீட்டர்(19). தென்னை தோட்டத்தில் தேங்காய் உரிக்கும் தொழில் செய்து வருகிறார். கடந்த இரு ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் இளம்பெண் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் பீட்டர் அங்கு சென்று  ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் அவர் கர்ப்பமானார். கடந்த இரு நாட்களுக்கு முன்பு அவளுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. 

இந்நிலையில் அந்த இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்ள பீட்டர் மறுத்துள்ளார். இதனால் ஏமாற்றப்பட்ட அந்த பெண் திருச்செந்தூர் மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். இதனையடுத்து மகளிர் காவல்துறையினர்  வழக்குபதிவு செய்து பீட்டரை தேடி வந்தார். இதற்கிடையே போலீசார் தேடுவதை அறிந்ததும் பீட்டர் தனது உடலில் மண்ணெண்னை ஊற்றி தற்கொலைக்கு முயன்று திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளர். இந்த சம்பவம் குறித்து அனைத்து மகளிர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.