வென்றது தமிழ்! தமிழ் படித்தால் அரசுப் பணிக்கு முன்னுரிமை

பதிவு செய்த நாள் : 17 மார்ச் 2020 16:43

தென்காசி

அரசு மற்றும் தனியார் கம்பெனிகளில் படித்து முடித்தோர்  பணிபுரிய பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அரசு பணிகளில் பணிபுரிய  டிஎன்பிஎஸ்சி  போன்றதேர்வுகள் எழுத வேண்டியுள்ளது.பள்ளி கல்லூரிகளில் தமிழ் மற்றும் ஆங்கில வழிக்கல்வி உள்ளது. தமிழ் மொழி  வழி கல்வி பயின்றவர்களுக்கு அரசு பணிகளில் முன்னுரிமை வழங்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதா தமிழக சட்டமன்றத்தில தாக்கல் செய்யப்பட்டுள்ளது. என தமிழக அரசு தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.