திருச்செந்தூர் கோவிலில் கொரோனா வைரஸை தடுக்கும் நடவடிக்கைகள் தீவிரம்

பதிவு செய்த நாள் : 16 மார்ச் 2020 13:45

திருச்செந்தூர்

" கொரோனா " வைரஸ் இந்தியாவில் தீவிரமாக பரவி வரும் நிலையில் தமிழகத்தில் அதன் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள. மக்கள் கூடும் இடங்களில் நோய்த் தடுப்பிற்கான கடும் நடவடிக்கைகளை எடுக்க அரசு அறிக்கை விடுத்துள்ளது.

இதனைத்தொடர்ந்து தமிழகத்தின் சிறந்த ஆன்மீக சுற்றுலா தலமான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை கோவில் நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது. 

இங்கு வெளிநாடுகளிலிருந்தும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வார்கள். 

இந்த நிலையில் தமிழக அரசின் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை அறிக்கையை தோடர்ந்து திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி  கோவில் சண்முகவிலாஸ் மண்டபத்தில் தமிழக அரசின் சார்பில் கொரோனா வைரஸ் நோய்த்டுப்பிற்கான விழிப்புணர்வு பதாகை வைக்கப்பட்டது.

கொரோனா வைரஸின் அறிகுறிக்கான சளி,  இருமல் காய்ச்சலை கட்டுப்படுத்திட மருத்துவக்குழு மூலம்  இயற்கை மூலிகை மருந்துகள் வழங்கப்படுகிறது. 

மேலும் கோவில்  பிரகாரங்களிலும் , பக்தர்களின்  தரிசன வரிசைகளிலும் , பக்தர்கள் கை வைக்கக்கூடிய இடங்களிலும் கோவில் பணியாளர்கள் முகக்கவசம் அணிந்துகொண்டு  நோய்த்தடுப்பு கிருமி நாசினி மருந்து  தெளித்தனர்.

மேலும் கோவில் சுற்றுப்புறப்பகுதிகளில் ஐந்திற்கும் மேற்பட்ட இடங்களில்  பக்தர்கள்  கைகளை சுத்தம் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.

மேலும்  கோவில் ஒலிபெருக்கி மூலம் பக்தர்களுக்கு கொரோனா வைரஸ் கட்டுப்பாடு குறித்து   விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.