அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வருமானவரித்துறை நோட்டீஸ்

பதிவு செய்த நாள் : 09 மார்ச் 2020 19:50

சென்னை,

வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்வது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 15,000க்கும் மேற்பட்ட பேராசிரியர்களிடம் ரூ.1.20 கோடி வரை டி.டி.எஸ் எனும் வரிப்பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.

ஆனால், 2018-19, 2019-20 நிதியாண்டில் இதுகுறித்த கணக்கை அண்ணா பல்கலைக்கழகம் தாக்கல் செய்யவில்லை என்று கூறி வருமான வரித்துறை இன்று நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத் தேர்வு கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பப்பட்டுள்ள அந்த நோட்டீஸில், தேர்வு கட்டுப்பாடு அதிகாரி வெங்கடேசன் மார்ச் 13 ஆம் தேதிக்குள் நேரில் ஆஜராகி இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.