மதுரை உயர்நீதிமன்றம் அருகே ஜெயலலிதா சிலை வைக்கப்பட்டது எப்படி?- தமிழ்நாடு அரசு பதில் தர உத்தரவு

பதிவு செய்த நாள் : 02 மார்ச் 2020 19:05

மதுரை,

உயர்நீதிமன்றம் மதுரை கிளை அருகே முன்னாள் முதலமைச்சர்  ஜெயலலிதா சிலை வைக்கப்பட்டது எப்படி என்று தமிழ்நாடு அரசு பதில் தர நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா, முத்துராமலிங்கத் தேவர் சிலைகளை அகற்ற உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தேவேந்திர குல வேளாளர் சங்க தலைவர் செல்வகுமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகே சுதந்திர போராட்ட வீரர் சுந்தரலிங்கனாருக்கு சிலை அமைக்க கோரி செல்வகுமார் வழக்கு தொடர்ந்துள்ளார்.

 நீதிபதிகள் எம்,எம் .சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கை விசாரித்தது.

ஜெயலலிதாவின் சிலை எந்த அடிப்படையில் அங்கு வைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தமிழ்நாடு அரசு 4 வாரத்தில் பதில் அளிக்குமாறு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

பொது இடங்கள், பூங்காக்கள், சாலைகளில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கட்டுமானங்களை அகற்றுவது, மாற்றியமைப்பது, ஒழுங்குபடுத்துவது தொடர்பாக விரிவான கொள்கைகளை வகுக்க வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் 2010ம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதைச் சுட்டிக்காட்டி, அந்த உத்தரவை அமல்படுத்தியது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.