ரத்த தான சாதனையாளருக்கு சட்டசபையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தல்

பதிவு செய்த நாள் : 16 பிப்ரவரி 2020 18:56

சென்னை,

202 முறை ரத்த தானம் செய்து கின்னஸ் சாதனை படைத்த பி.ஏ.கே.பி. ராஜசேகரன் மறைவுக்கு தமிழ்நாடு சட்டசபையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றுமாறு  வலியுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை-ராயபுரம் சிங்கார வேலர் மணிமண்டப நுாலகத்தில்  பி.ஏ.கே.பி. ராஜசேகரனுக்கு நினைவு அஞ்சலி கூட்டம் நடத்தப்பட்டது  பாண்டிச்செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையின் முதல்வர் சாந்திமலர், ஆர்.எஸ்.ஆர்.எம். மகப்பேறு மருத்துவமனையின் கண்காணிப்பு அதிகாரி கலைவாணி மற்றும் முன்னாள் கவுன்சிலர் சம்பத், வழக்கறிஞர்கள் ரவிந்திரஜெயன், கே.சி.எஸ்.கே.பாலாஜி, எல்.முருகவேலு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர், இந்த கூட்டத்தில் மறைந்த பி,.ஏ.கே.பி ராஜசேகரனுக்கு இரங்கல் தெரிவித்து சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது,

இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகளை ராயபுரம் ரவுண்டப் வாட்ஸ் அப் குழு,நண்பர்கள், நகர நல அமைப்பு, தமிழ்நாடு நேதாஜி சமுக சேவை இயக்கம், மற்றும் வடசென்னை தமிழ் இளைஞர் கழகம் ஆகிய அமைப்புகள் செய்திருந்தனர்,