நெல்லையில் என்பிஆர், என்.ஆர்.சி, சி ஏ.ஏ. சட்டங்களை எதிர்த்து பேரணி

பதிவு செய்த நாள் : 14 பிப்ரவரி 2020 18:24

.நெல்லை.

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாகி, கடந்த 2014, டிசம்பா் 31-ம் தேதிக்கு முன் இந்தியாவில் குடியேறிய இந்துக்கள், சீக்கியா்கள், பவுத்தா்கள், சமணா்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவா்களுக்கு குடியுரிமை அளிக்க வகை செய்யும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்துக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் தொடா்ந்து வருகின்றன.


இந்நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டம், குடிமக்களின் தேசிய மக்கள்தொகை பதிவேடு, என்.ஆர்.சி. ஆகிய சட்டங்களை எதிர்த்து தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி நெல்லை மாநகராட்சி அலுவலகத்தை நோக்கி குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் பேரணி நடைபெற்றது .

பேரணி நெல்லை டவுனில் உள்ள உழவர் சந்தையில் இருந்து பெண்கள் உள்பட 5ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் 650 மீட்டர் நீளமுள்ள தேசிய கொடியை கையில் ஏந்தி பேரணியாக வந்தனர்.