கன்னியாகுமரியில் 3ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை

பதிவு செய்த நாள் : 14 பிப்ரவரி 2020 18:15

கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வெள்ளமடம் பகுதியில்  3-ம் வகுப்பு மாணவிக்கு  பாலியல்  தொல்லை கொடுத்த  கூலி தொழிலாளி  செல்வராஜ் (வயது 56) என்பவரை போலீசார் கைது செய்தனர் 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்து உள்ள வெள்ளமடம் பகுதியை சேர்ந்தவர்  செல்வராஜ் வயது 56.  கூலி தொழிலாளியான இவர் இதே பகுதியை சேர்ந்த 3-ம் வகுப்பு மாணவி வீட்டின் அருகே விளையாடிக்கொண்டியிருந்த போது மாணவியை தன் வீட்டிற்கு  வலுகட்டாயமாக இழுத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.  

அப்பொழுது சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சிறுமியை காப்பற்றினார்கள். சிறுமியின் பெற்றோர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில்  நாகர்கோவில்  அனைத்து மகளிர் நிலைய போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி   செல்வராஜ் - ஐ   கைது செய்தனர்.