புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த 40 ரானுவ வீரர்களுக்கு மரியாதை

பதிவு செய்த நாள் : 14 பிப்ரவரி 2020 18:08

கன்னியாகுமரி,

காஷ்மீர் மாநிலம் புல்வமாவில் கடந்த ஆண்டு 2019 பிப்ரவரி 14-ம் தேதி, மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் உயிரிழந்தனர். இந்த கொடூர தாக்குதல் தாக்குதல் நடைபெற்றதன் ஓராண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் - புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த 40 ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தினர். 

கன்னியாகுமரி  நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன் குமரி  ஜவான்ஸ் அமைப்பு சார்பாக நினைவேந்தல் நிகழ்ச்சியும்,  இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியும் நடைபெற்றது.

இதில் குமரி மாவாட்ட ஆட்சியர் பிராசாந்த் மு.வடநேரே மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஶ்ரீநாத் கலந்துகொண்டு மலர் துவி அஞ்சலி செலுத்தினார்கள்.