நெல்லை தென்காசி ஒருங்கிணைந்த மாவட்டத்திற்கான வாக்காளர் பட்டியல் வெளியீடு

பதிவு செய்த நாள் : 14 பிப்ரவரி 2020 13:44

நொல்லை

நெல்லை தென்காசி  ஒருங்கிணைந்த மாவட்டத்திற்கான வாக்காளர் பட்டியலை நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் இன்று வெளியிட்டார் . இதன்படி 26 லட்சத்து 33 ஆயிரத்து 436 வாக்காளர்கள் உள்ளனர்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி நெல்லை மற்றும் தென்காசி ஒருங்கிணைந்த மாவட்டமாக இன்று இறுதி வாக்காளர்பட்டியல் வெளியிடப்பட்டது. நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர்சதீஷ் இறுதி வாக்காளர்பட்டியலை வெளியிட மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் பெற்றுக்கொண்டார் .  

இதன்படி மாவட்டத்தில் 12 லட்சத்து 92 ஆயிரத்து 642 ஆண் வாக்காளர்களும் , 

13 லட்சத்து 40 ஆயிரத்து 652 பெண் வாக்காளர்களும் , 

132 இதர பிரவினரும் என சேர்த்து மொத்தம் 26 லட்சத்து 33 ஆயிரத்து 426 வாக்காளர்கள் உள்ளனர் . 

இறுதி வாக்காளர்பட்டியில் ஆட்சியர் அலுவலகம் , கோட்டாட்சியர் அலுவலகம் , வட்டாட்சியல் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. 

இதில் பெயர் மாற்றம் ,திருத்தம் , சேர்த்தல் இருந்தால் செய்து கொள்ளலாம் என்றும் , மேலும் பார்வையற்றவர்கள் வசதிக்காக பிரைலி முறை வாக்காளர் அடையாள அட்டையும் வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்தார் .