நெல்லையில் உணவுப் பூங்கா: பட்ஜெட்டில் ஓபிஎஸ் அறிவிப்பு

பதிவு செய்த நாள் : 14 பிப்ரவரி 2020 12:30

சென்னை,

ஒவ்வொரு மாவட்டத்திலும், அதன் சிறப்புக்கு ஏற்ப ஒவ்வொரு உணவுப் பொருட்களுக்கான பூங்கா அமைக்கப்படும் என 2020 தமிழ்நாடு பட்ஜெட்டில் இன்று துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

தென்காசியில் எலுமிச்சை மையம், 

தூத்துக்குடியில் மிளகாய் மையம் ஏற்படுத்தப்படும்.

தூத்துக்குடி அருகே, ரூ.49,000 கோடி மதிப்பீட்டில் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை அமைக்கப்படும்

திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டானில் ரூ.77.94 கோடி செலவில் உணவுப் பூங்கா அமைக்கப்படும்.

திருந்திய நெல்சாகுபடி முறை 27.18 லட்சம் ஏக்கர் பரப்பளவுக்கு விரிவுபடுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை, தருமபுரி, மதுரை, திருச்சி, நெல்லை மாவட்டங்களில் ரூ.50 கோடியில் ஒருங்கிணைந்த உழவர் விற்பனை மைய வளாகங்களும் நிறுவப்படும். 

தமிழ்நாடு முழுவதும் புதிய குளங்களை ஏற்படுத்துதல், நீர் நிலைகளைப் பராமரித்தல் உள்ளிட்ட பாசன வசதிகளுக்கு ரூ.655 கோடி ஒதுக்கப்படும் 

37 மாவட்டங்களிலும் தலா 2 வட்டங்களில் முதியோர் ஆதரவு மையங்கள் அமைக்கப்படும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் உரையில் அறிவித்தார்.