சீமான் மீது கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு

பதிவு செய்த நாள் : 13 பிப்ரவரி 2020 15:36

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சென்னை - கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2.10.2018 ஆம் தேதி காமராஜரின் நினைவு நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதையை செலுத்திய பின் ஊடகத்திற்கு பேட்டி அளித்தார்.

அப்போது சீமான் தமிழ்நாடு அரசுக்கு எதிராகவும், வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாகவும் கோட்டூர்புரம் காவல்துறை ஆய்வாளர் அஜூ குமார் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் சீமான் மீது உள்நோக்கத்தோடு தவறான தகவலை பரப்புதல், இரு பிரிவினரிடையே அமைதியை சீர்குலைப்பது ஆகிய பிரிவுகளின் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.