நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தாமதம் ஏன்?: மாநில தேர்தல் ஆணையம் விளக்கம்

பதிவு செய்த நாள் : 13 பிப்ரவரி 2020 13:41

மதுரை,

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தாமதமாவது குறித்து தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விளக்கமளித்துள்ளது.

தமிழ்நாட்டில் நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சிகளுக்கான தேர்தல் தேதியை அறிவிக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

இந்த வழக்கு உயர்நீதிமன்ற கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது.

தேர்தல் ஆணையம் விளக்கம்

இந்திய தேர்தல் ஆணையம் திருத்தம் செய்யப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிடவில்லை என்றும், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பின்னரே மாநகராட்சி, நகராட்சி பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் நடத்த முடியும் என்றும் தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் தரப்பில் தெவிக்கப்பட்டது.

தேர்தல் எப்போது நடத்த முடியும் என்பது குறித்து 3 வாரத்தில் தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை மேலும் 3 வாரத்துக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்திவைத்தது.

உள்ளாட்சி தேர்தல், ஊராட்சி நகர் மன்றத் தலைவர் தேர்தல் மட்டுமே நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 9 மாவட்டங்களில் இன்னும் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.