அஞ்சல் நிலையத்துக்கு கூடுதல் இடம் வழங்கிட ஆட்சியரிடம் காயல்பட்டிணம் மக்கள் கோரிக்கை.

பதிவு செய்த நாள் : 11 பிப்ரவரி 2020 18:17

காயல்பட்டிணம் நகரின் பிரதான சாலையில் - 1953 ஆம் ஆண்டு முதல் தபால் நிலையம் இயங்கிவருகிறது. ஏறத்தாழ 65 ஆண்டுகளாக ஒரே கட்டிடத்தில் இயங்கி வரும்  தபால் நிலைய கட்டிடம் பழுதடைந்துள்ள காரணத்தால் - காலி செய்து வேறு இடத்திற்கு செல்ல கட்டிட உரிமையாளர்கள், தபால்துறையிடம் பல ஆண்டுகளாக கோரி வருகிறார்கள். பல ஆண்டுகளாக மாற்று இடத்தினையும், தபால்துறையும் தேடிவருகிறது.

2016 ஜூலை மாதம் - பேருந்து நிலையம் வளாகத்தில் உள்ள காலியிடத்தில், தபால் நிலையத்திற்கான கட்டிடத்தை கட்டிட - நகர்மன்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மூன்று மாதங்களில் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், மக்கள் பிரதிநிதிகள் நகர்மன்றத்தில் இல்லை. அதன் பிறகு - நகராட்சி அதிகாரிகள் அந்த கோரிக்கையை கண்டுக்கொள்ளவில்லை.


பேருந்து நிலைய வளாகம் பொருத்தமான இடம் என்பதாலும், வேறு இடம் கிடைக்கவில்லையென்றால் நகரின் ஒதுக்குப்புறத்திற்கு தபால் நிலையம் சென்றுவிட வாய்ப்புள்ள காரணத்தினாலும், நூற்றுக்கணக்கான மக்களும், நகரின் அனைத்து மக்கள் மற்றும்  பொது நல அமைப்புகளும் இக்கோரிக்கையை ஆதரித்து அதிகாரிகளிடம்  கையெழுத்துயிட்ட மனுவை வழங்கியுள்ளார்கள்.