மத்திய அரசு தங்கள் சுயலாபத்திற்காக சில நடிகர்களை பயன்படுத்திக்கொள்கிறது - நல்லக்கண்ணு

பதிவு செய்த நாள் : 08 பிப்ரவரி 2020 12:44

நாகர்கோவில்

மத்திய அரசு தங்கள் சுயலாபத்திற்காக சில நடிகர்களை பயமுறுத்துகிறது சில நடிகர்களை பயன்படுத்திக்கொள்கிறது என்றும் டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு பெரிய இடத்தில் இருந்து துவங்குகிறது ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பணம் செலவழித்து படித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கும் நிலையில் இதில் ஊழல் நடந்திருப்பது மிகவும் மோசமான செயல் என கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

 கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலுக்கு இன்று வருகை தந்த  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு    செய்தியாளர்களிடம்   கூறும்போது:-   

மத்திய அரசு தங்கள் சுயலாபத்திற்காக சில நடிகர்களை பயமுறுத்துகிறது சில நடிகர்களை பயன்படுத்திக்கொள்கிறது. இந்திய குடியுரிமை சட்ட திருத்தத்தை பொருத்தவரை அது மதத்தை அடிப்படையாக மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. 

தமிழகத்தில் டி என் பி எஸ் சி தேர்வு முறைகேடு மிகவும் மோசமான செயல். ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பணம் செலவழித்து படித்து முடித்து வேலைக்காக காத்திருந்து தேர்வு எழுதும்போது அதில் ஊழல் செய்வதால் மாணவர்களின் வாழ்க்கையே பாதிக்கப்படுகிறது. இது மிகவும் வேதனையான விஷயம். இந்த முறைகேடு பெரிய இடத்தில் இருந்து துவங்குகிறது. இதுகுறித்து தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். 

தமிழகத்தை பொறுத்தவரை போராட்டங்களுக்கு அரசு மதிப்பளிக்க என்ற செய்தியாளரின் கேள்விக்கு

பேச்சுக்கு மதிப்பு இல்லாத போது போராட்டத்துக்கு எப்படி மதிப்பு இருக்கும் என்று கேள்வி எழுப்பினார். செருப்பு விவகாரத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அந்த சிறுவனை தனது பேரன் போன்றவர் என்று கூறியிருப்பது குறித்து கேட்டபோது 

மகனே சுயகௌரவம் பார்க்கும்போது பேரன் மட்டும் ஏற்றுக்கொள்வாரா? செருப்பை தூகுவது என்பது அவமானகரமானது என்பதால் அவர் மன்னிப்பு கேட்டு விட்டார் எனவே மேலும் இது போன்று நடக்காமல் பார்த்துக் கொள்வதுதான் சரி என்று அவர் கூறினார்.