தைப்பூச விழா - திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் வெள்ளம்

பதிவு செய்த நாள் : 08 பிப்ரவரி 2020 12:42

திருச்செந்தூர்

தைப்பூச விழாவை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அலகுவேல் குத்தி, காவடி சுமந்து, அங்கபிரதட்சனம் செய்து.  கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

தைபூசத்தை முன்னிட்டு சுப்பிரமணியசுவாமி கோவிலில்  பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். 

தைப்பூச விழாவினை முன்னிட்டு இன்று அதிகாலை 3:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 

3:30க்கு விஸ்வரூப தீபாராதனை. அதனை தொடர்ந்து 4:00மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. 

தை பூசத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பாத யாத்திரையாக வந்த பக்தர்கள் காவடி சுமந்து அலகுவேல் குத்தி, அங்கபிரதட்சணம் செய்து கடலில் புனித நீராடி நிண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றி சுவாமி தரிசனம் செய்தனர். 

பாதுகாப்பு பணியில் நூற்றுக்கு மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபட்டிருந்தனர். விழா ஏற்பாடுகளை தக்கார் இரா.கண்ணன் ஆதித்தனர் மற்றும் செயயல் அலுவலர் அம்ரித் ஆகியோர் செய்திருந்தனர்.