காயல்பட்டினம் வழியை அரசு பேருந்துகள் புறக்கணித்தால் வழக்கு தொடர மெகா அமைப்பு முடிவு

பதிவு செய்த நாள் : 07 பிப்ரவரி 2020 13:57

தூத்துக்குடி,

   தூத்துக்குடி - திருச்செந்தூர் வழித்தடத்தில் உள்ள காயல்பட்டின வழியை பிப்ரவரி 16 க்கு பிறகும், அரசு பேருந்துகள் புறக்கணிப்பது தொடர்ந்தால் சம்பந்தப்பட்ட பேருந்து கழகத்தின் மேலாண்மை இயக்குனர் மற்றும் ஓட்டுநர்/நடத்துனர் மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குகள்  தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது.

சட்ட வல்லுனர்களின் ஆலோசனைப்படி வழக்குத் தொடர மெகா அமைப்பு தீர்மானித்துள்ளது. நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது என்ற முடிவை  சம்பந்தப்பட்ட போக்குவரத்து கழகங்களின் மேலாண்மை இயக்குனர்களுக்கு மெகா அமைப்பு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தத் தகவலை நுகர்வோரான பொதுமக்களுக்கும் தெரிவிக்க  தூத்துக்குடி - திருச்செந்தூர் வழித்தடத்தில், மெகா அமைப்பு சார்பாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. திருச்செந்தூர், ஆத்தூர், முக்காணி பகுதிகளிலும் , சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.