திருடப்பட்ட செல்போன்களை உரியவர்களிடம் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாத் ஒப்படைத்தார்

பதிவு செய்த நாள் : 07 பிப்ரவரி 2020 13:39

நாகர்கோவில்

கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திருட்டு  மற்றும் தவறவிடப்பட்ட விலை உயர்ந்து 80 செல்போன்களை கைப்பற்றிய போலீசார் அதனை சம்பந்தபட்ட பொது மக்களிடம் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாத்  ஒப்படைத்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 5 மாதங்களில் அனைத்து காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் செல்போன்கள் திருட்டு மற்றும் தவறவிட்ட செல்போன்களின் எண்ணிக்கை 80 ஆக இருந்த நிலையில் போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.  

இவற்றில் திருட்டுப்போன செல்போன்களை கைப்பற்றியும் அதில் சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்தும் நடவடிக்கை எடுத்தனர் இதுதவிர தவறவிட்ட செல்போன்கள் உட்பட அனைத்து செல்போன்களையும் இன்று மாவட்ட போலிஸ் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாத், நாகர்கோவில் எஸ்.பி.  அலுவலகத்தில் வைத்து உரியவரிடம் ஒப்படைத்தார். 

திருப்பி ஒப்படைக்கப்பட்ட 80 செல்போன்களின் மதிப்பு 13  லட்ச ரூபாய் என கூறபட்டது.