பொங்கல் பண்டிகை: 3 நாட்களுக்கு சென்னை மெட்ரோ ரயிலில் 50 சதவீதம் கட்டண சலுகை

பதிவு செய்த நாள் : 13 ஜனவரி 2020 12:51

சென்னை,

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 3 நாள்களுக்கு சென்னை மெட்ரோ ரயிலில் பயணக் கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 15, 16, 17 ஆகிய 3 நாட்களுக்கு சென்னை மெட்ரோ ரயில் பயணக் கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக் கிழமைகள் மற்றும் அரசு விடுமுறை நாட்களில் 50 சதவீதம் கட்டணச் சலுகை வழங்கப்படும் என ஏற்கனவெ மெட்ரோ நிர்வாகம் அறிவித்திருந்தது.

இச்சலுகை பொங்கல் பண்டிகையான ஜனவரி 15 முதல் 17ம் தேதி வரை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணைப்பு பேருந்துகள்

காணும் பொங்கல் அன்று மெரினா கடற்கரை செல்வதற்கு பயணிகளுக்கு ஏதுவாக அரசினர் தோட்டம் (அண்ணா சாலை) மற்றும் டி.எம்.எஸ். மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து மெரினா கடற்கரைக்கு பேருந்து சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.