எந்த ஒரு மொழியையும் திணிக்கவோ, எதிர்க்கவோ கூடாது : வெங்கய்யா நாயுடு பேச்சு

பதிவு செய்த நாள் : 12 ஜனவரி 2020 17:29

சென்னை,

எந்த ஒரு மொழியையும் திணிக்கவோ, எதிர்க்கவோ கூடாது என்று குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு இன்று சென்னையில் விழாவில் பேசும்போது தெரிவித்துள்ளார்.

சென்னை - ஆழ்வார்பேட்டையில் நடைபெற்ற ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் நூற்றாண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு.

இளைஞர்கள் ஜாதி, மத ரீதியான பாகுபாடுகளை ஏற்கமாட்டோம் என உறுதி ஏற்க வேண்டும் .

யாரையும் சாதி ரீதியாக வேறுபடுத்தி பார்க்கக்கூடாது; பிற மதத்தை சேர்ந்தவர்களை மதிக்க வேண்டும்.

பீட்சா, பர்கர் போன்றவை நமது நாட்டு தட்பவெப்ப சூழ்நிலைக்கு ஏற்றவை அல்ல; பிற நாடுகளுக்கு ஏற்றவை.

யோகா பயிற்சி என்பது மோடிக்காக அல்ல; நமது ’பாடி’க்காக.

எந்த மொழியை வேண்டுமானாலும் நாம் கற்கலாம்.

அதே சமயம் தாய் மொழி கல்வி என்பது மிகவும் அவசியமான ஒன்று.  குறைந்தது உயர்கல்வி வரை தாய்மொழியில் படிக்க வேண்டும்.

மத்திய, மாநில அரசுகள் தாய்மொழி கல்வியை கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 என்றும் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தனது பேச்சில் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் சார்பில் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.