ஊராக ஊராட்சி தேர்தல் : தூத்துக்குடியில் அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜு வாக்கு சேகரிப்பு

பதிவு செய்த நாள் : 22 டிசம்பர் 2019 20:03

தூத்துக்குடி

டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி தூத்துக்குடியில் அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜு, எம்எல்ஏ கருணார் மற்றும் உறுப்பினர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு ஊராட்சி ஒன்றியம் சவலாப்பேரி பகுதியில் அதிமுக வடக்கு மாவட்டச் செயலாளர் மற்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ, எம்எல்ஏ கருணாஸ் ஆகியோர் 

மாவட்ட ஊராட்சி உறுப்பினர் வேட்பாளர் திருமதி பிரியா, கழக ஒன்றிய வார்டு உறுப்பினர் வேட்பாளர் திருமதி தங்கமுத்து காளியம்மாள்,

சவலாப்பேரி பகுதியில் கழக ஒன்றிய வார்டு உறுப்பினர் வேட்பாளர் திரு. கருப்பசாமி,

வெள்ளாளங்கோட்டை பகுதியில் கழக ஒன்றிய வார்டு உறுப்பினர் வேட்பாளர் திருமதி விமலா ஆகியோரை ஆதரித்து பிரச்சாரம் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.