அறப்போர் இயக்கத்தின் டுவிட்டர் முடக்கம் சைபர்கிரைம் போலீசார் நடவடிக்கை

பதிவு செய்த நாள் : 02 டிசம்பர் 2019 16:18

சமூக வலைதளங்களில் பல்வேறு அரசியல் கட்சிகள் பற்றி அவதுாறு பரப்பியதாக அறப்போர் இயக்கத்தின் டுவிட்டர் பக்கங்களை முடக்கி சைபர்கிரைம் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

அறப்போர் இயக்கம் அரசியல் கட்சிகளின் பல்வேறு நடவடிக்கைகளை தங்களது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறது. 

தமிழக அரசின் பொதுப்பணித்துறை, மின்வாரியம், உள்ளாட்சி அமைப்புகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் பல்வேறு நடவடிக்கைகளை தங்களது சமூக வலைதளங்களில் அவதுாறு கருத்துக்களை பரப்புவதாகவும், அந்த இயக்கம் தனிப்பட்ட நபர்களை குறிவைத்து மீம்ஸ் வெளியிட்டு வருவதாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அறப்போர் இயக்கத்தின் டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களை சைபர் கிரைம் போலீசார் கண்காணித்து வந்தனர். 

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அறப்போர் இயக்கத்தினர் தொடர்ந்து அவதூறான தகவல்களை பதிவு செய்தது தெரியவந்தது. இதையடுத்து நேற்று அறப்போர் இயக்கத்தின் டுவிட்டர் பக்கம் இணையத்தில் முடக்கப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.