டிரைவரை கொலை செய்த வழக்கில் மற்றொரு டிரைவருக்கு ஆயுள்

பதிவு செய்த நாள் : 20 ஆகஸ்ட் 2019 00:52

துாத்­துக்­குடி:

துாத்­துக்­குடி அருகே தொழில் போட்­டி­கா­ர­ண­மாக நடந்த கொலை வழக்­கில் வாலி­ப­ரக்கு  ஆயுள்­தண்­டனை மற்­றும் 1000 ரூபாய் அப­ரா­தம் விதித்து  தூத்­துக்­குடி மாவட்ட கூடு­தல் அமர்வு கோர்ட் தீர்ப்பு வழங்­கி­யது.

தாள­முத்­து­ந­கர் சமீர் வியாஸ் நக­ரைச் சோ்ந்த ராமர் மகன் பொன்­வண்டு (எ) பொன்­ராஜ் (26). இவர் சிலு­வைப்­பட்­டி­யைச் சோ்ந்த ஜேசு­ராஜா மகன் திலக் என்­ப­வ­ரி­டம்  டிரை­வ­ராக  வேலை பார்த்து வந்­தார்.

அங்கு அதே பகு­தி­யைச் சோ்ந்த சுப்­பி­ர­ம­ணி­யன் மகன் கணேச பூபதி (25)) என்­ப­வ­ரும் மாற்று டிரை­வ­ராக வேலை பார்த்து வந்­தார்.

    பொன்­ரா­ஜூக்­கும், கணேச பூப­திக்­கும்   தொழில் போட்டி இருந்து வந்­தி­ருக்­கி­றது.

இந்த விரோ­தம் கார­ண­மாக கடந்த 24.07.2015 அன்று இரவு     பொன்­ராஜ், கணேச பூப­தியை அரி­வா­ளால் வெட்டி கொலை செய்­துள்­ளார்.

இது­கு­றித்து   புகா­ரின் பேரில் தாள­முத்­து­ந­கர்  போலீ­சார் வழக்­குப்­ப­திவு செய்து விசா­ரணை மேற்­கொண்டு பொன்­ராஜை கைது செய்­த­னர்.

இந்த வழக்கு துாத்­துக்­குடி மாவட்ட கூடு­தல் அமர்வு  கோர்ட்டில் நடந்து வந்­தது.

இவ்­வ­ழக்கை விசா­ரணை செய்த நீதி­பதி   கவுத­மன் நேற்று     பொன்­ராஜை குற்­ற­வாளி என தீர்ப்பு வழங்கி, பொன்­ராஜ்க்கு ஆயுள்­தண்­ட­னை­யும், ஆயி­ரம் ரூபாய் அப­ரா­தம் விதித்து தீாப்பு வழங்­கி­னார்.

  இதை­ய­டுத்து  பொன்­ராஜ் பாளை­., மத்­திய சிறை­யில் அடைக்­கப்­பட்­டுள்­ளார்.