விண்ணேற்பு அன்னை மலங்கரை கத்தோலிக்க தேவாலய திருவிழா

பதிவு செய்த நாள் : 20 ஆகஸ்ட் 2019 00:33


செம்பருத்திவிளை,:

                 பிலாங்காலை சகாயநகர் விண்ணேற்பு  அன்னை மலங்கரை  கத்தோலிக்க தேவாலய திருவிழாவில்  நிறைவு ஆடம்பர திருப்பலி நடந்தது.

                  பிலாங்காலை புனித விண்ணேற்பு  அன்னை  ஆலய திருவிழாவானது கடந்த 9ம் தேதி துவங்கி 18ம் தேதி வரை நடந்தது. தினமும் மாலை ஜெபமாலை, மாலை ஜெபம், ஆடம்பர திருப்பலி சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தது.  நிகழ்ச்சிகளை  பங்கின் அருள் வாழ்வியங்கள், பக்த இயக்கங்கள், பாலர்  சபை, பீட சிறார், மறைக்கல்வி மன்றம், பங்கு பேரவை, பங்கு மக்கள் சிறப்பித்திருந்தன. விழா திருப்பலியில் பிஷப் யூஹானோன் மார் கிறிஸோஸ்டோம், பிஷப் வின்சென்சென்ட் மார், பவுலோஸ், 30க்கும் மேற்பட்ட குருக்கள் திருப்பலி நிறைவேற்றினர். 24 சிறுவர்களுக்கு  பிஷப் வின்சென்ட் மார் பவுலோஸ் புது நன்மை வழங்கினார். நிறைவு விழாவான கடந்த 18ம் தேதி காலை ஆடம்பர திருப்பலி, குடும்ப விழா பொதுக்கூட்டம்,. நண்பகல் விருந்து மாலை ஜெபம், திருக்கொடியிறக்கம், பரிசு  வழங்குதல், இரவு புனித செபஸ்தியார் வரலாற்று நாடகம் நடந்தது.

 விழா ஏற்பாடுகளை பங்கு தந்தை ஸ்டீபன் மாத்தார், பங்கு பேரவை பொருளர் அசோக், செயலர் ஜார்ஜ், பேரவை உறுப்பினர்கள் ஜெய குமார், கிறிஸ்டோபர், முன்னாள் கவுன்சிலர் நேசமணி பங்கு மக்கள், பங்கு பேரவையினர் செய்திருந்தனர்.