திருநெல்வேலி:
நெல்லையில் தினமலர் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி துவங்கியது. கண்காட்சியில் இடம் பெற்ற 100 க்கும் மேற்பட்ட ஏ.ஸி., ஸ்டால்களில் பொருட்கள் வாங்க ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.
பொதுமக்கள் நலன் கருதி அனைத்து வீட்டு உபயோகப் பொருட்களையும் ஒரே இடத்தில் வாங்கும் வகையில் தினமலர் பிரம்மாண்டமான வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சியை கடந்த ஆண்டு நடத்தியது. இக் கண்காட்சிக்கு மக்கள் அமோக ஆதரவு அளித்தனர். இரண்டாம் ஆண்டாக தினமலர் சார்பில் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி பாளை., மத்திய சிறைக்கு எதிரேயுள்ள காது கேளாதோர் பள்ளி மைதானத்தில் நேற்று துவங்கியது.
மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கரன் கண்காட்சி அரங்கை திறந்து வைத்தார். போலீஸ் துணை கமிஷனர் சரவணன், தினமலர் தினேஷ், வீனஸ் எலெக்ட்ரானிக்ஸ் மேலாளர் சக்திவேல், ஆச்சி மசாலா மேலாளர் ராபர்ட், ஆவின் மார்க்கெட்டிங் மேலாளர்கள் அனுஷா, சாந்தி, தி சென்னை சில்க்ஸ் ஜவுளி நிறுவன மேலாளர் தோப்புசாமி, நெல்லை கிளை மேலாளர் ரமேஷ்குமார், தமிழ்நாடு மெர்க்கன்டைல் பாங்க் முதன்மை மேலாளர் எர்னஸ்ட் வசீகரன், முதுநிலை மேலாளர் வி.ஏ.ராஜன், காஜா நிறுவன அலுவலர் சிவகுமார் உட்பட பலர் திருவிளக்கு ஏற்றினர். பல்வேறு நிறுவன நிர்வாகிகள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
100 க்கும் மேற்பட்ட ஏ.ஸி., ஸ்டால்கள்
கண்காட்சியில் 100 க்கும் மேற்பட்ட ஏ.ஸி., ஸ்டால்கள் இடம் பெற்றுள்ளன. தின்பண்டங்களில் இருந்து கார்கள் வரை மக்கள் விரும்பி வாங்கும் அனைத்துப் பொருட்களும் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. டிவி, மிக்ஸி, பிரிட்ஜ், கிரைண்டர், சோபா, பர்னிச்சர் வகைகள், மசாஜ், உடற்பயிற்சிக் கருவிகள், வாட்டர் ஹீட்டர் உபகரணங்கள், சப்பாத்தி மேக்கர்கள், மின்விசிறிகள், தோல் பைகள், சூட்கேஸ்கள், பெல்ட்கள், பத்திகள், தண்ணீர் ஸ்பிரே கருவிகள், அழகிய ஓவியங்கள், படங்கள், சிறிய டப்பாக்கள், டெலி ஷாப்பிங் பொருட்கள், பெண்களைக் கவரும் சுடிதார், சேலை ரகங்கள், ஜூஸ் மேக்கர்கள், கடலைமிட்டாய்கள், சுவீட், கார வகைகள், அல்வா வகைகள், ஐம்பொன் மோதிரங்கள், மெட்டல் தயாரிப்புகள், பேன்ஸி பொருட்கள், செருப்பு வகைகள், கரப்பான், கொசுத்தொல்லை போக்கும் மருந்துகள், தையல் மிஷின்கள், அப்பளம், சிப்ஸ் வகைகள், மின் சாதனங்கள், பொம்மைகள், துடைப்பம், சத்து மாவு, மசாலா, ஊறுகாய் வகைகள், ஊட்டி வர்க்கீ, ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா, மதுரை கமர்கட்டு, சாத்தூர் காரச்சேவு, கருப்பட்டி மிட்டாய், சீனி மிட்டாய், நெய் லட்டு, ஆவின் குளிர்பானங்கள், நெய் உட்பட பல்வேறு பொருட்கள் ஸ்டால்களில் வைக்கப்பட்டுள்ளன. இவை கண்காட்சிக்கு வரும் மக்களுக்கு சிறப்பு சலுகை விலையில் விற்கப்படுகின்றன.
விலை குறைவு
வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்கு மக்கள் பல்வேறு இடங்களுக்கு அலைவதைத் தவிர்க்கும் வகையில் ஒரே அரங்கில் அனைத்துப் பொருட்களும் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளன. பல்வேறு வகையான பொருட்களும் விற்பனைக்கு வந்துள்ளதால் மக்கள் தங்களுக்கு விருப்பமானதை வாங்க முடிகிறது. வெளியில் வாங்குவதை விட குறைந்த விலையில் சிறந்த ஆபர்களுடன் கண்காட்சியில் பொருட்கள் விற்பனை நடக்கிறது. நேற்று காலை கண்காட்சி துவங்கிய சிறிது நேரத்தில் மக்கள் கண்காட்சிக்கு வரத் துவங்கினர். இரவு வரை ஆயிரக்கணக்கானோர் கண்காட்சிக்கு திரண்டு வந்து பொருட்களை வாங்கிச் சென்றவண்ணம் இருந்தனர். குழந்தைகள், பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
நாவிற்கினிய உணவுகள்
கண்காட்சிக்கு அரங்கில் நாவிற்கினிய உணவு வகைகளுடன் புட்கோர்ட் அமைக்கப்பட்டுள்ளது. நமது மண் சார்ந்த பாரம்பரிய உணவு வகைகள், இளைய தலைமுறையினர், சிறுவர், சிறுமிகள் விரும்பி உண்ணும் உணவுகள் அங்கு விற்கப்படுகின்றன. பீட்சா, பர்கர், சமோசா, பானிபூரி, மசாலா அப்பளம், காலிபிளவர், சிக்கன் பீட்சா என ஏராளமான உணவு வகைகள் சுவையுடன் தயாரித்து சூடாக விற்பனை செய்யப்படுகின்றன. கண்காட்சிக்கு வரும் மக்களை நறுமணத்துடன் சுண்டி இழுக்கிறது புட் கோர்ட். கண்காட்சிக்கு வந்தவர்கள் இங்கு அமர்ந்து உணவு வகைகளை ருசித்து விட்டு செல்கின்றனர்.
விளையாட்டுகள் உண்டு
பெற்றோருடன் வரும் குழந்தைகளை குஷிப்படுத்துவதற்கு கிரியேட்டிவ் விளையாட்டுப் பொருட்கள்,
தண்ணீர் படகு உள்ளிட்ட கேம் ஷோக்கள் உண்டு. டிக்கட் கவுன்டரில் குழந்தைகளுக்கு மாஸ்க் வழங்கப்படுகிறது. குழந்தைகளுக்கு பலூன், பெண்களுக்கு இலவச மெகந்தி உண்டு. அனைவரையும் கவரும் வகையில் வண்ணமீன்கள் கண்காட்சி அரங்கில் உள்ளது. மரியா நர்சரி கார்டன் சார்பில் போன்சாய் மரங்கள் இடம் பெற்றுள்ளன.
வீட்டு உபயோகப் பொருட்களை ஒரே கூரையின் கீழ் வாங்கும் வகையிலும், அதே நேரம் விரும்பிய உணவுகளை சாப்பிட்டு பொழுதுபோக்கு அம்சங்களுடன் குடும்பத்துடன் ஜாலியாக உலா வருவதற்கு ஏற்ற வகையிலும் தினமலர் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. குறைந்த விலையில் வீட்டுக்குத் தேவையான பொருட்களை அள்ளிச் செல்வதற்கு தினமலர் கண்காட்சிக்கு வாங்க.... வாசகர்களே....
கண்காட்சியை இணைந்து வழங்குவோர்: வீனஸ் எலெக்ட்ரானிக்ஸ்.
கோ ஸ்பான்சர்: ஆச்சி மசாலா, காஜா பாம் அண்ட் ஆயில், ஆவின், தி சென்னை சில்க்ஸ்.
சப்போர்ட் ஸ்பான்சர்: தமிழ்நாடு மெர்க்கன்டைல் பாங்க், ஆரா மோட்டார்ஸ் ஸ்கோடா கார்.
டிவி மீடியா: மயூரி டிவி.
ஆக. 16–18
கண்காட்சி நேரம்:
காலை 10.00 – இரவு 9.00 மணி.
இடம்: பாளை., (மத்திய சிறை எதிரில்) காது கேளாதோர் பள்ளி மைதானம் (100 க்கும் மேற்பட்ட ஏ.ஸி., ஸ்டால்கள்)
நுழைவுக்கட்டணம்: ரூ. 30/ (6 வயதுக்கு மேல்)
தினமலர் கண்காட்சிக்கு வந்து மக்கள் பயன் பெற வேண்டும்:போலீஸ் கமிஷனர்
'தினமலர் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சிக்கு வந்து பொருட்களை வாங்கி மக்கள் பயன் பெற வேண்டும்' என மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கரன் தெரிவித்தார்.
தினமலர் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சியை நேற்று துவக்கி வைத்த மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கரன் கூறியதாவது:
நெல்லை மாநகர மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மாசு, நெகிழி, சாலை விபத்து இல்லாத மாநகராக நெல்லை உருவாக வேண்டும். இதற்கு மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். தினமலர் சார்பில் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி துவங்கியுள்ளது. இங்கு வீட்டுக்கு தேவையான மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட பொருட்கள், சமையல் பொருட்கள், ஆர்கானிக் பொருட்கள், கோ–ஆப்டெக்ஸ் ஜவுளிகள், ஆவின் பொருட்கள் விற்பனைக்கு உள்ளன. மக்கள் கண்காட்சியை பார்வையிட்டு பொருட்களை வாங்கி பயன் பெற வேண்டும்.
இவ்வாறு போலீஸ் கமிஷனர் பாஸ்கரன் தெரிவித்தார்.
60 சதவீதம் வரை ஆடித்தள்ளுபடி
வீனஸ் எலெக்ட்ரானிக்ஸ் 'கலக்கல்'
தினமலருடன் இணைந்து கண்காட்சியை வழங்கும் வீனஸ் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம், பாளை., முருகன்குறிச்சி, மேரி சார்ஜென்ட் பள்ளிக்கு எதிரில், தென்காசி மேல ஆவணி மூல வீதியில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் கண்காட்சி ஸ்டாலில் பொருட்களை வாங்குபவர்களுக்கு நிச்சய பரிசு வழங்குகிறது.
60 சதவீதம் வரை ஆடித்தள்ளுபடி வழங்குகிறது. 32 இஞ்ச் ஸ்மார்ட் டிவி 48 சதவீத தள்ளுபடி விலையில் விற்கப்படுகிறது. ஒன்றரை டன் இன்வெர்ட்டர் ஏ.ஸி, 32 இஞ்ச் எல்.இ.டி., டிவி 45 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வீடியெம் மிக்ஸி, குக்கர், கிரைண்டர், ஹாட் பாக்ஸ் இணைந்து 5,990 ரூபாய் சிறப்பு விலைக்கு விற்கப்படுகிறது.
அனைத்துப் பொருட்களுக்கும் மாத தவணை வசதி உண்டு. இந்த நிறுவனத்தின் முதல் ஆண்டு விழா செப்டம்பர் 12ம் தேதி கொண்டாடப்படுகிறது. கண்காட்சியில் வீனஸ் ஸ்டாலில் எலெக்ட்ரானிக் பொருட்களை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களில் 4 பேர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப்படும் என உரிமையாளர் கதிரேசன் தெரிவித்தார்.
இலவச வாளிகளை அள்ளி
வழங்கும் ஆச்சி மசாலா
ஆச்சி மசாலாப் பொருட்களுக்கு தனி மவுசு உண்டு. இந்த நிறுவன ஸ்டாலில் பொருள் வாங்குபவர்களுக்கு இலவச பிளாஸ்டிக் வாளி வழங்கப்படுகிறது. 100 கிராம் பெருங்காயப்பொடி வாங்கினால் 125 ரூபாய் மதிப்புள்ள வாளி, அரை கிலோ மசாலா வாங்கினால் 50 ரூபாய் மதிப்புள்ள வாளி, அரை கிலோ ஊறுகாய் வாங்கினால் 40 ரூபாய் மதிப்புள்ள வாளி, 300 கிராம் ஊறுகாய் வாங்கினால் அரை கிலோ கொழுக்கட்டை மாவு பாக்கெட், நெய் ஒரு கிலோ, அரை கிலோ வாங்கினால் ஒவ்வொரு வாளி வழங்கப்படுகிறது. இந்த நிறுவன ஸ்டாலில் மசாலாப் பொருட்கள், உடனடி உணவுப் பொருட்கள், ஊறுகாய் வகைகள், பாயாச தயாரிப்பு பொருட்கள், நெய், சோப், கிளீனிங் பொருட்கள், அப்பளம், ஜாம் என பல்வேறு பொருட்கள் குறைந்த விலையில் விற்கப்படுகின்றன.
கடை விலையில் விற்பனை
காஜா நிறுவனம் 'அசத்தல்'
காஜா பாம் அண்ட் ஆயில் நிறுவன ஸ்டாலில் நார்மல், கோதுமை, ராகி என மூன்று வகை சேமியா வகைகள், கோதுமை மாவு, தலைவலிக்கு நிவாரணம் தரும் காஜா பாம், காஜா ஆயில், குளிர் பானங்கள், குளுக்கோஸ் எனர்ஜி பானங்கள், சத்து மாவு, கடலை மிட்டாய் வகைகள், மசாலாக் கடலை, சினாக்ஸ் ரகங்கள், தேயிலை விற்பனைக்கு உள்ளன. ஸ்டாலில் பொருட்களை வாங்குபவர்களுக்கு கடை விலையில் வழங்கப்படும் என அந்த நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனித்துவம் மிகுந்த ஆவின்
அரசு நிறுவனம் என்பதால் ஆவின் பொருட்களை மக்கள் விரும்பி வாங்குவர். இந்த நிறுவன ஸ்டாலில் 200 மி.லி., 500 மி.லி., ஒரு லிட்டர் நெய், பாதாம் பவுடர், பாதாம், பிஸ்தா, முந்திரி சத்துமாவு பாக்கெட்கள், ஐஸ்கிரீம்கள், ஸ்ட்ராபெரி, பிஸ்தா, வெண்ணிலா, சாக்லேட் சுவை குளிர்பானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஆவின் பொருட்களின் மகத்துவத்தை அறிந்த பலரும் அவற்றை வாங்கிச் செல்கின்றனர். காலத்திற்கு ஏற்றபடி, மக்களைக் கவரும் வகையில் புதிய பொருட்களை அறிமுகப்படுத்துவது ஆவின் நிறுவனத்தின் தனிச்சிறப்பு.
சேமிப்புத் திட்டங்களை வழங்கும்
தமிழ்நாடு மெர்க்கன்டைல் பாங்க்
தமிழ்நாடு மெர்க்கன்டைல் பாங்க் நிறுவன ஸ்டாலில் பல்வேறு திட்டங்கள் குறித்து மக்களுக்கு விளக்கி துண்டுப்பிரசுரம் வழங்கப்படுகிறது. ரூபாய் 10 லட்சத்திற்கு ஆயுள் காப்பீடு, ரூபாய் 20 லட்சத்திற்கு தனிநபர் விபத்துக் காப்பீடு வசதியுடன் சிரஞ்சீவி ரெக்கரிங் டிபாசிட் திட்டத்தில் இணைந்து மாதம் 9,500 ரூபாய் சேமிக்கலாம், 7 ஆண்டுகள் முடிவில் 10.26 லட்சம் ரூபாய் பெறுங்கள் என பாங்க் அறிவித்துள்ளது.
மாதாந்திர சேமிப்புத் திட்டத்துடன் ஆயுள் காப்பீடு, தனிநபர் விபத்து காப்பீடு இணைந்த திட்டம், மாத தவணைத் தொகை 1000 ரூபாய் உள்ளிட்ட அம்சங்கள் கொண்டது இத்திட்டம். இத்திட்டத்தில் 36 மாதங்கள் பணம் செலுத்தி ரூபாய் 40,075, 60 மாதங்கள் பணம் செலுத்தி 71,745 ரூபாய், 84 மாதங்கள் பணம் செலுத்தி 1 லட்சத்து 8 ஆயிரத்து 58 ரூபாய் மொத்த முதிர்வுத்தொகை பெறலாம். நவரத்தின மாலா டிபாசிட் திட்டத்திலும் மக்கள் இணையலாம் என மெர்க்கன்டைல் பாங்க் அறிவித்துள்ளது.
பாதுகாப்பு அம்சங்கள்
நிறைந்த ஸ்கோடா கார்
ஆரா மோட்டார்ஸ் ஸ்கோடா கார் நிறுவனம் நெல்லை – நாகர்கோவில் ரோட்டில் உள்ளது. ஸ்கோடா ராபிட் ரைடர் காரின் ஷோரூம் விலை 6.99 லட்சம் ரூபாய். 2 ஏர் பேக், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், ஒரு செகண்டுக்கு 16 முறை விட்டு விட்டு பிடிக்கும் ஏ.பி.எஸ். பிரேக் உள்ளிட்ட பாதுகாப்பு சிறப்பு அம்சங்கள் கொண்டது இந்த கார். இக்காருக்கு 6 ஆண்டுகள் வாரண்டி, 6 ஆண்டுகள் ரோடு சைடு உதவி வசதிகள் உண்டு.
ஸ்கோடா ராபிட் டீசல் ஆட்டோமாடிக் வசதி காரை மேனுவல் விலையில் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காரில் 4 ஏர் பேக் வசதி, எலெக்ட்ரானிக் ஸ்டேபிலிட்டி கன்ட்ரோல், ஹில் கோல்டு கன்ட்ரோல் வசதி உள்ளிட்ட வசதிகள் இந்த காரில் உண்டு. கார்களை வாடிக்கையாளர்கள் நேரில் பார்வையிட்டு விபரங்களை அறிந்து கொள்ளலாம் என இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
மனதைக் கவரும்
மலர் கண்காட்சி
தினமலர் கண்காட்சியில் இந்த ஆண்டின் புதிய வரவு, மலர் கண்காட்சி. மலர்கள் மூலம் கேரள கதகளி நடனக் கலைஞர் சிலை நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மலர்கள், காய்கறிகள், தர்ப்பூசனி பழம் மூலம் விமானம், மயில்கள், இதயம் உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றின் அழகைக் கண்டு மயங்கும் வாடிக்கையாளர்கள் அவற்றின் முன்பு நின்று செல்பி எடுத்துச் செல்கின்றனர்.
ஸ்டாலில் கொடைக்கானல் ஹோம் மேட் சாக்லேட் ஸ்டால் உள்ளது. நூற்றுக்கணக்கான சாக்லேட் ரகங்கள் அங்கு உள்ளன. கவுன்டரில் கூப்பன் பெற்றுச் சென்றால் ஒரு குடும்பத்திற்கு 200 ரூபாய் சாக்லேட்டிற்கு 50 ரூபாய் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
தினமலர் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி மன நிறைவு அளிக்கிறது
பாளை.யில் தினமலர் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி 15ம் தேதி துவங்கி 4 நாட்கள் நடக்கிறது. கண்காட்சியின் துவக்க நாளான நேற்று விடுமுறை என்பதால் ஏராளமானோர் குடும்பத்துடன் வந்து கண்காட்சியை உற்சாகமாக கண்டுகளித்தனர். கண்காட்சி குறித்து பொதுமக்கள் தெரிவித்த கருத்து:
பாலகிருஷ்ணன், பெருமாள்புரம் :
தினமலர் நடத்தும் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி ஸ்டால்களில் உள்ளவர்கள் பொருட்களின் பயன்பாடு குறித்து தெளிவாக விளக்கம் அளிப்பது பாராட்டுக்குறியதாகும். குழந்தைகளை குதுாகலப் படுத்தும் வகையில் கூடுதல் விளையாட்டு உபகரணங்களை ஏற்படுத்த வேண்டும். கண்காட்சியை அனைத்து தரப்பினரும் கண்டுகளிக்கும் வகையில் தேதியை நீட்டிக்க வேண்டும். குழந்தைகளுக்கு பலுான், மாஸ்க், மெகந்தி இலவசமாக வழங்குவது வரவேற்கத்தக்கது.
ஜெயஸ்ரீ, சமாதானபுரம்:
கண்காட்சியில் உள்ள மலர் கண்காட்சி மனதை கவரும் வகையில் உள்ளது. இதுதவிர நர்சரி கார்டன், மீன் கண்காட்சி, குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் கவர்ந்துள்ளன. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன் பெறும் வகை யில் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. ராஜஸ்தான் மார்பிள் பொருட்கள், கேரளா மூலிகை சோப், ராஜஸ்தான் சப்பல்ஸ் போன்றவை கவர்ந்துள்ளது.
சண்முகசுந்தரி, குலவணிகர்புரம்:
கண்காட்சியில் வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களும் ஒரே இடத்தில் அணிவகுத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கண்காட்சியை பார்க்க குடும்பத்தோடு வந்தோம். மீண்டும் ஒரு முறை கண்காட்சியை பார்க்க திட்டமிட்டுள்ளேன்.
ஜெயந்தி, நெல்லை டவுன்:
சென்னைக்கு நிகராக நெல்லையில் பிரமாண்டமாக தினமலர் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி அமைந்துள்ளது. மலர் கண்காட்சி, ஆச்சி மசாலா ஸ்டால் கவரும் வகையில் உள்ளது. கண்காட்சியில் குஜராத், ராஜஸ்தான், கேரளா பொருட்கள் அதிகளவில் உள்ளது. உள்ளூர் தயாரிப்பாளர்களின் ஸ்டால்களும் அதிகம் இடம் பெறச் செய்தால் சிறப்பாக இருக்கும். மீண்டும் கண்காட்சியை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது.
முத்துக்குமாரசாமி, பாளை.,:
கண்காட்சியில் கிளினீங் மெட்டிரியல், தையல் மிஷின்கள், சப்பாத்தி மேக்கர் உட்பட வீட்டு உபயோக பொருட்கள் தள்ளுபடி விலையில் கிடைப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.குழந்தைகளை குதுாகலப்படுத்தும் வகையில் விளையாட்டு உபகர ணங்கள் இடம் பெற்றுள்ளன. உணவு ஸ்டால்கள் ருசியான தின்பண்டங்கள் உள்ளன.
அனுஷா, பாளை., :
வீட்டிற்கு தேவையான ஏ டூ இசட் ஒரே கூரையின் கீழ் கொண்டு வந்திருப்பது மகிழ்ச்சியான விஷயமாகும். இருசக்கர வாகனங்கள், கார் போன்றவற்றை சுத்தம் செய்வதற்கான பிரஷ், காந்திமதி கோ– ஆப்டெக்ஸ் நிறுவனம் தள்ளுபடியில் தரமான ஜவுளிகளை விற்பனை செய்கிறது. பெண்களுக்கான ஜவுளிகள் பல்வேறு டிசைன்கள் உள்ளன. இதற்காக மீண்டும் ஒரு முறை கண்காட்சிக்கு வரவுள்ளேன்.
ராமலிங்கம், சாந்தி நகர் :
கண்காட்சியில் அனைத்து ஸ்டால்களும் ஏசி., வசதி செய்யப்பட்டுள்ளதால், வீட்டு உபயோக பொருட்களை நிதானமாக தேர்வு செய்ய முடிகிறது. ஆச்சி மசாலா ஸ்டால் சிறப்பாகவுள்ளது. பொருட்களுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்குவது வரவேற்கத்தக்கதாகும். தரமான உணவு வகைகள் இடம் பெற்றுள்ளன. குழந்தைகளை குதுாகலப்படுத்தும் வகையில் விளையாட்டு உபகரணங்கள் இடம் பெற்றுள்ளன.
ராஜீ, சங்கர்நகர் :
அனைத்து விதமான வீட்டு உபயோக பொருட்களும் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. குழந்தைகள், பெண்களுக்கான ஜவுளி ரகங்கள் விலை சற்று கூடுதலாக உள்ளது. ஆயில் இல்லாமல் பொரிக்கும் இயந்திரம் உட்பட பல்வேறு பொருட்கள் கண்காட்சியில் இடம் பெற்றிருப்பது கூடுதல் சிறப்பாகும்.
குமார முருகேசன், வள்ளியூர் :
ஆச்சி மசாலா ஸ்டால், கேழ்வரகு ஸ்வீட், கார வகைகள் ஸ்டால் சிறப்பாகவுள்ளது. ஜூஸ் மேக்கர் கருவி, ஆயில் இல்லாமல் பொரிக்கும் இயந்திரம் உட்பட பல்வேறு வீட்டு உபயோக பொருட்கள் பயனுள்ளதாக உள்ளது. நர்சரி கார்டனில் உள்ள போன்சாய் மரங்கள், மரக்கன்றுகள் அதிகளவில் இடம் பெற்றுள்ளது. மீண்டும் ஸ்டால்களை பார்க்க வேண்டும் என்ற ஆவலை துாண்டுகிறது.
டாக்டர். குமரகுரு, மகாராஜநகர் :
நெல்லை மக்களுக்கு பெரிய அளவில் பொழுது போக்கு அம்சம் இல்லை. இந்த கண்காட்சி சிறந்த பொழுதுபோக்காக உள்ளது. கண்காட்சி மன அழுத்தத்தை குறைத்து, மன நிறைவை அளிக்கிறது. கண்காட்சியில் உள்ள வீட்டு உபயோக பொருட்களில் எதை தேர்வு செய்வது என்பதில் குழப்பம் ஏற்படுகிறது. நுகர்பொருட்கள், பாடி மசாஜசர் கருவி, எலக்ட்ரானிக் அப்ளையன்சஸ் கவரும் வகையில் உள்ளது. மலர் கண்காட்சி சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.