கோவில்பட்டியில் தீ விபத்து நடந்த தீப்பெட்டி ஆலை.

பதிவு செய்த நாள் : 28 ஜூலை 2019 09:46

கோவில்பட்டி,:

கோவில்பட்டி லாயல்மில் காலனி தங்கப்பன் நகரில் சன்னாசி மகன் மாரியப்பன் என்பவர், தீப்பெட்டி தொழிற்சாலைகளில் தீக்குச்சிகளை வாங்கி பெட்டிகளில் அடைத்து அனுப்பும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் காலையில் கழிவு தீக்குச்சிகளில் திடீரென உராய்வு ஏற்பட்டு தீப்பிடித்தது. தகவல் அறிந்து கோவில்பட்டி தீயணைப்பு நிலைய வீரர்கள் நிலையில் அலுவலர் இசக்கி தலைமையில் விரைந்து வந்து, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். தேச மதிப்பு கணக்கிடப்படவில்லை.

  இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், தாசில்தார் மணிகண்டன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.