துாத்­துக்­குடி பனி­மய மாதா ஆல­ய­தி­ரு­விழா: கொடியேற்றத்துடன் கோலா­க­ல­ துவக்கம்

பதிவு செய்த நாள் : 27 ஜூலை 2019 09:32


துாத்­துக்­குடி:

’அன்னை மரியே வாழ்க’ கோஷம் விண்­ணைப்­பி­ளக்க, துாத்­துக்­குடி பனி­மய மாதா ஆலய திரு­விழா நேற்று கொடி­யேற்­றத்­து­டன் கோலா­க­ல­மாக துவங்­கி­யது.  

உலக அள­வில் புகழ்­பெற்ற துாத்­துக்­குடி பனி­மய மாதா ஆலய திரு­விழா   நேற்று கொடி­யேற்­றத்­து­டன் துவங்­கி­யது.

நேற்று முன்­தி­னம் கொடிப்­ப­வனி நகர வீதி­க­ளில் ஊர்­வ­ல­மாக கொண்­டு­வ­ரப்­பட்­டது.  

கொடி­யேற்று விழாவை முன்­னிட்டு நேற்று அதிகாலை 4 மணிக்கு ஜெபம் நடந்­தது.

இதில் பனி­மய மாதா ஆல­யத்­தின் முன்­னாள் பங்­கு­தந்தை லெரின் டி ரோஸ் தலை­மை­யில் தரு­வைக்­கு­ளம் பங்­கு­தந்தை எட்­வர்ட், பங்­கு­தந்தை ஜெய­சீ­லன் உள்­ளிட்ட 29 பங்­கு­தந்­தை­கள் கலந்­து­கொண்­ட­னர்.

 ­தொ­டர்ந்து முதல் திருப்­பலி நடந்­தது. பின்­னர் காலை 6 மணிக்கு இரண்­டாம் திருப்­பலி நடந்­தது.   7.30 மணிக்கு திருப்­பலி நிறைவு பெற்ற பின்­னர் கொடி­யேற்­றம் நடந்­தது.

ஆயர் ஸ்டீபன் ஆண்­டகை தலைமை வகித்­தார். கொடி­யேற்­றும் போது, கூடி­யி­ருந்த ஆயி­ரக்­க­ணக்­கான இறை­மக்­கள் ’மரியே வாழ்க’ என்று   எழுப்­பிய கோஷம் விண்­ணைப்­பி­ளந்­தது.

கொடி­யேற்­றம் நடக்­கும் போது மேள,தாளங்­கள், வாண வேடிக்­கை­கள் தொடர்ச்­சி­யாக நடந்­தது.   அதே போல் கொடி­யேற்­றத்­தின் போது புறாக்­க­ளும், பலுான்­க­ளும் பறக்க விடப்­பட்­டன.  

  மக்­கள் நேர்ச்­சை­யாக கொண்டு வந்த பால், வாழைப்­ப­ழம் ஆகி­ய­வற்றை கொடி­ம­ரத்­தின் அடி­யில் வைத்து வணங்­கி­னர்.   கொடி­யேற்­றம் முடிந்­த­வு­டன் நேர்ச்­சை­யாக கொண்டு வந்த பழம், பால் உள்­ளிட்ட பொருட்­களை பொது­மக்­க­ளுக்கு வழங்­கி­னர்.

மதி­யம் 12 மணிக்கு துாத்­துக்­குடி மறை­வட்ட முதன்­மை­குரு ரோலிங்க்­டன் தலை­மை­யில் அன்­னைக்கு  பொன்­ம­கு­டம் அணி­விக்­கும் நிகழ்ச்சி நடந்­த­து.கொடி­யேற்ற விழா­வில் தூத்­துக்­குடி கலெக்­டர் சந்­தீப் நந்­துாரி, எஸ்பி (பொ) அருண் சக்­தி­கு­மார், சப்–­­க­லெக்­டர் சிம்­ரான் ஜீத் சிங் கலோன்,    மறை­மா­வட்ட முதன்மை குரு பன்­னீர்­செல்­வம்  உட்­பட  பல்­லா­யி­ரக்­க­ணக்­கா­னோர் கலந்­து­கொண்­ட­னர்.

விழா­வில் தொடர்ந்து ஒவ்­வொரு நாளும் சிறப்பு திருப்­பலி நடக்­கி­றது.  ஆக. 4-ம் தேதி (ஞாயிற்­றுக்­கி­ழமை) இரவு 7மணிக்கு பெரு­விழா மாலை ஆரா­தனை ஆயர் ஸ்டீபன் தலை­மை­யில் நடக்­கி­றது. அதன்­பின் இரவு 9 மணிக்கு ஆலய வளா­கத்­தில் அன்­னை­யின்   பவனி நடக்­கி­றது.

திரு­வி­ழா­வி்ன முக்­கிய நிகழ்­வான ஆகஸ்ட் 5ம் தேதி  அன்­னை­யின் பெரு­விழா அன்று காலை 4.30 மணிக்கு முதல் திருப்­ப­லி­யும், 5.30மணிக்கு 2ம் திருப்­ப­லி­யும் கோட்­டார் ஆயர் நச­ரேன் தலை­மை­யில் நடக்­கி­றது.  ஏற்­பா­டு­களை பேரா­லய அதி­பர் மற்­றும் பங்­குத்­தந்தை குமார் ராஜா தலை­மை­யில்  உதவி பங்­குத்­தந்தை கிங்க்ஸ்­டன், ஜேசு­ராஜா,  களப்­ப­ணி­யா­ளர் மைக்­கேல் மற்­றும் இறை­மக்­கள் செய்து வரு­கின்­ற­னர்.