ஏரல் சேர்­மன் அரு­ணா­ச­ல­சு­வாமி கோயி­லில் திரு­விழா கொடி­யேற்­றத்­து­டன் துவக்­கம்

பதிவு செய்த நாள் : 23 ஜூலை 2019 00:59


ஏரல்:

ஏரல் சேர்­மன் அரு­ணா­ச­ல­சு­வாமி கோயி­லில் ஆடி அமா­வாசை திரு­விழா நிகழ்ச்­சி­கள் கொடி­யேற்­றத்­து­டன் துவங்­கி­யது.

ஏரல் சேர்­மன் அரு­ணா­சல சுவாமி கோயில் ஆடி அமா­வாசை திரு­விழா நிகழ்ச்­சி­கள் 12 நாட்­கள் நடக்­கி­றது. முதல்­நாள் திரு­விழா  கொடி­யேற்­றத்­து­டன் துவங்­கி­யது. கோயில் பரம்­பரை அக்­தார் கருத்­தப்­பாண்­டிய நாடார் கொடி­யேற்றி வைத்­தார்.

நிகழ்ச்­சி­யில் ஆயி­ரக்­க­ணக்­கான பக்­தர்­கள் கலந்து கொண்டு சுவா­மியை வழி­பட்­ட­னர்.இரவு கேடய சப்­ப­ரத்­தில் சேர்­மத்­தி­ருக்­கோ­லத்­தில் சுவாமி கோயில் வலம் வரு­தல் நடந்­தது.  

வரும் 25ம் தேதி முதல் 30ம் தேதி வரை தின­மும் இரவு பல்­வேறு சப்­ப­ரங்­க­ளில் வெவ்­வேறு அலங்­கா­ரத்­தில் சுவாமி கோயில் வலம் வரு­தல் நிகழ்ச்­சி­கள் நடக்­கி­ன்றன.வரும் 31ம் தேதி 10ம் திரு­வி­ழா­வான ஆடி அமா­வாசை திரு­விழா நடக்­கி­றது.

அன்று மதி­யம் 1.30 மணிக்கு சுவாமி உரு­கு­ப­ல­கை­யில் கற்­பூர விலா­சம் வரும் காட்சி, சிறப்பு அபி­ஷேக ஆரா­தனை, மாலை­யில் இலா­மிச்ச வேர் சப்­ப­ரத்­தில் சேர்­மத் திருக்­கோ­லம், இரவு 1 மணிக்கு 1ம் காலம் கற்­பக பொன்­சப்­ப­ரத்­தில் எழுந்­த­ரு­ளும் நிகழ்ச்­சி­க­ளும் நடக்­கி­றது.

ஆக.1ம் தேதி காலை 2ம் காலம் வெள்­ளை­சாத்தி தரி­ச­னம், பச்சை சாத்தி அபி­ஷே­கம், மதி­யம் 3ம் காலம் பச்சை சாத்தி தரி­ச­னம், மாலை­யில் ஏரல் சவுக்கை முத்­தா­ரம்­மன் கோயில் பந்­த­லில் தாக­சாந்தி, இரவு சுவாமி கோயில் மூலஸ்­தா­னம் சேரு­தல் ஆகி­யவை நடக்­கி­றது.

ஆக.2ம் தேதி காலை முதல் இரவு வரை பல்­வேறு நிகழ்ச்­சி­கள் மற்­றும் திரு­வ­ருள் புரி­யும் மங்­கள தரி­ச­னத்­து­டன் இந்த ஆண்டு ஆடி அமா­வாசை திரு­விழா நிறைவு பெறு­கி­றது.

திரு­விழா நாட்­க­ளில் தின­மும் இரவு 7 மணிக்கு நாதஸ்­வ­ரம், பொம்­ம­லாட்­டம், வில்­லிசை, பக்­தி­இசை, பர­த­நாட்­டி­யம், வழக்­காடு மன்­றம், சொற்­பொ­ழிவு, ஆகிய சிறப்பு நிகழ்ச்­சி­கள் நடக்­கி­றது. 

ஏற்­பா­டு­களை கோயில் பரம்­பரை அக்­தார் கருத்­தப்­பாண்­டிய நாடார் செய்து வரு­கி­றார்.